'கட்டிப்பிடி வைத்தியர்' சினேகனுக்கு விரைவில் திருமணம்.. அதுவும் அவர் தலைமையில்!

சென்னை: பிரபல பாடலாசிரியரான சினேகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டவர் பூமி, மெளனம் பேசியதே, சாமி, ஆட்டோகிராஃப், சூரரைப்போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களில் ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் சினேகன்.

பாடலாசிரியராக மட்டுமின்றி நடிகராகவும் உள்ளார் சினேகன். யோகி, உயர்திரு 420, கோமாளி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கட்டிப்பிடி வைத்தியர்

கட்டிப்பிடி வைத்தியர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார் சினேகன். இதில் சக பெண் போட்டியாளர்களை அடிக்கடி கட்டிப்பிடித்து வந்ததால், இவரை கட்டிப்பிடி வைத்தியர் என அழைத்து வந்தனர் நெட்டிசன்கள்.

ரன்னர் அப் சினேகன்

ரன்னர் அப் சினேகன்

பிக்பாஸ் வீட்டில் ஓவியாவுக்கு ஆதரவாகவும் நடுநிலையாகவும் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல ஆதரவும் கிடைத்தது. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரன்னர் அப் ஆனார் சினேகன்.

மக்கள் நீதி மய்யம் கட்சி

மக்கள் நீதி மய்யம் கட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அதனை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனுடன் கவிஞர் சினேகனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் கவிஞர் சினேகன்.

Recommended Video

கருத்து சுதந்திரம் இல்லை என்றால் நாட்டில் வாழ முடியாது | SNEHAN | OOUIJA PRESS MEET| FILMIBEAT TAMIL
தோல்வியடைந்த சினேகன்

தோல்வியடைந்த சினேகன்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார் சினேகன். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட சினேகன் தோல்வியை தழுவினார்.

விரைவில் திருமணம்

விரைவில் திருமணம்

இந்நிலையில் 42 வயதான சினேகனுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையேற்று நடத்தி வைப்பார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X