சினேகன் மருத்துவமனையில் அனுமதி.. இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படும் கன்னிகா.. உதவிக்கூட யாரும் இல்ல!

சென்னை: பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக, அவரின் மனைவி கன்னிகா ரவி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இதனால், பலரும் அவருக்கு என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.

திரைப்படத்துறையில் தனித்துவமான கவிதை வரிகளால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள பாடலாசிரியர் சினேகனின் தந்தை சிவசங்கு கடந்த மாதம் உயிரிழந்தார். 101 வயது வரை நிறைவான வாழ்க்கை நடத்திய அவர், வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கு தஞ்சாவூரில் உள்ள காரியாபட்டியில் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 18ந் தேதி சினேகனின் சொந்த ஊரிலேயே சிவசங்கு அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

Lyricist Snehan kannika
Photo Credit:

சினேகனுக்கு என்னாச்சு: இந்நிலையில், சினேகன் தற்போது மருத்துவர்களின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை குறித்து கவலைப்படும் ரசிகர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும், என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். மேலும், சினேகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். சினேகன் மருத்துவமனையில் இருப்பதால், கன்னிகாவும் தனது இரண்டு குழந்தைகளுடன் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார். உதவிக்கு கூட யாரும் இல்லாததால். குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

கன்னிகா பதிவு: தந்தையின் இறப்பால் துவண்டு இருந்த சினேகன், தொடர்ந்து அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இந்துள்ளார். மேலும், பல புதிய படங்களுக்கான பாடல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இப்படியான நேரத்தில் ஏற்பட்ட உடல் நலக்குறைவு ரசிகர்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு விரைவில் நலம் கிடைக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ஏராளமானோர் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X