Lyricist Snehan: என்னை ஒரு பக்கத்து ஆளாக காட்ட முயற்சிக்காதீர்கள்.. சினேகன் காட்டம்!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை பெறும் வகையில் தொடர்ந்து நீதிமன்றத்தின் வழக்கு பதிவு செய்து வழக்கை தொடர்ந்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கை தொடர்ந்து பல்வேறு வகையில் விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த பாடலாசிரியர் சினேகன் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

பாட்டுக்கு இசையா அல்லது இசைக்கு பாட்டா என்ற விவாதத்தை காட்டிலும் படத்திற்கு பாட்டு தேவைப்படுவதாக சினேகன் தெரிவித்துள்ளார். யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் சினேகன் குறிப்பிட்டுள்ளார். ஐபிஆர்எஸ் என்ற சர்வதேச கட்டமைப்பின் அடிப்படையிலேயே இளையராஜா இத்தகைய போராட்டங்களை முன் வைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Lyricist Snehan opens up about Ilayaraja amp amp Vairamuthu issue

இசையமைப்பாளர் இளையராஜா: இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை பெறும் வகையில் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வழக்கை நடத்தி வருகிறார். தன்னுடைய 4,500 க்கும் மேற்பட்ட பாடல்களை எக்கோ மற்றும் அகி நிறுவனங்கள் ஒப்பந்த காலத்தையும் மீறி பயன்படுத்தி வருவதாக இளையராஜா வழக்குப்பதிவு செய்துள்ளார். அந்தப் படங்களின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் உள்ளதால் அவர்களுடன் செய்துக் கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் அதன் பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக எக்கோ நிறுவனம் வாதத்தை முன் வைத்து வருகிறது.

ரஜினி பட விவகாரம்: இதனிடைய கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியானது. அதில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த பாடலை பயன்படுத்துவதற்கும் இளையராஜா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அந்த பாடலை அந்த பிரமோவில் இருந்து நீக்கும்படி அவர் கேட்டிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்ந்து விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த பாடலாசிரியர் சினேகன் இது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சினேகன் கருத்து: மேலும் தன்னுடைய உரிமைக்காக இளையராஜா போராடி வருவதாகவும் இது குறித்து தான் பேசுவது சரியாக இருக்காது என்று அவர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் இதுகுறித்து தனிமனிதர்களாகிய நாம் கருத்துக் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய பறிபோகும் பட்சத்தில் தான் அதற்காக குரல் கொடுப்பேன் என்றும் சினேகன் கூறியுள்ளார். பெரிய ஆட்களை கேள்வி கேட்கக்கூடாது என்று கூறுவது சரியாக இருக்காது என்றும் சினேகன் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளருக்கு இசை முக்கியம்: தன் பாடலை உபயோகப்படுத்துவதற்கு முன்னதாக தன்னிடம் கேட்கலாமே என்று தான் இளையராஜா கேட்பதாகவும் சினேகன் தெரிவித்துள்ளார். மேலும் இளையராஜா மற்றும் வைரமுத்து இடையில் கடந்த 20 ஆண்டுகளாக உள்ள காழ்ப்புணர்ச்சியை அவர்கள் பேசித் தீர்க்க வேண்டும் என்றும் சினேகன் தெரிவித்துள்ளார். இதனிடையே, எழுத்து எப்படி ஒரு கவிஞனுக்கு முக்கியமோ அதேபோல இசையும் ஒரு இசையமைப்பாளருக்கு முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே தன்னை ஒரு பக்கத்து ஆளாக காட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் காட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X