விருமன் இசைவெளியிட்டு விழா..சூர்யா இப்படி செய்திருக்கக்கூடாது..வருத்தத்தில் சினேகன்!

சென்னை : விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைப்பிதழ் கூட அனுப்பாததால் பாடலாசிரியர் சினேகன் வருத்தத்தில் உள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் 'கஞ்சா பூவு கண்ணால' பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஆகஸ்ட் 12ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

விருமன்

விருமன்

கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விருமன். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சூரி, கருணாஸ், சரண்யா பொண்வண்ணன், மைனா நந்தினி, வடிவுக்கரசி,சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அதிதி ஷங்கர்

அதிதி ஷங்கர்

கிராமத்து கதை அம்சம் கொண்ட இப்படத்தில் குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றி அழகாக கூறப்பட்டுள்ளது. அதிதி ஷங்கர் இந்த திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் தைரியமான பாசக்கார பெண்ணாக நடித்துள்ளார். விருமன் படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இசைவெளியீட்டுவிழா

இசைவெளியீட்டுவிழா

விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் மிகப்பிரமாண்ட செட்டுகள் போடப்பட்டு நடந்தது. இந்த விழாவில் அப்படத்தின் டிரைலரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டு, டிரைலரைப் பார்க்கும் போதே படத்தின் வெற்றி கண்ணில் தெரிவதாக கூறியிருந்தார். மேலும், இந்த விழாவில், சூர்யா, கார்த்தி, பாரதி ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, அதிதி ஷங்கர்,இயக்குநர் ஷங்கர், மைனா நந்தினி, வடிவுக்கரசி,சிங்கம் புலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சினேகன் வேதனை

சினேகன் வேதனை

இந்த படத்தில் உள்ள பாடல்கள் இணையத்தில் தற்போது கவனம் பெற்று வருகின்றன. அதில் வானம் கிடுகிடுங்க என்ற பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பாடலாசியர் சினேகன் எழுதி இருந்தார். ஆனால், இவ்வளவு பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கூட வரவில்லை. கூடிய விரைவில் பாடல் ஆசிரியர் என்ற இனமே இல்லாமல் அழிந்துவிடும் என தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X