2 வயதில் பிரிந்த தாய்.. பாசத்தை காட்டிய சினேகன்.. காணாமல் போன தாலி.. கன்னிகா ரவியின் கதை!
சென்னை: அழகு, திறமை, வசீகரம் என அனைத்திற்கும் சொந்தக்காரிதான் நடிகை கன்னிகா ரவி. சினேகனின் மனைவியான கன்னிகா ரவி அருப்புக்கோட்டை மாவட்டத்தில் 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எட்டாம் தேதி பிறந்தார். சினிமா பின்புலமே இல்லாத கன்னிகா ரவி, சினிமாவிற்கு வந்தது எப்படி? சினேகனை காதலித்தது எப்படி? என்பதை இந்த செய்தியில் நம்ம பார்க்கலாம்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கன்னிகா ரவியின் அப்பா மளிகை கடையை வைத்து வியாபாரம் செய்துள்ளார். அப்பா மளிகை கடை வைத்து இருப்பதால், கன்னிகாவும் அவ்வப்போது அந்த மளிகை கடையில் பல வேலைகளை செய்து இருக்கிறார். கன்னிகா ரவிக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே, அம்மா வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டதால், கன்னிகாவை வளர்த்தது சித்தி தான். சிறுவயதிலிருந்தே சித்தி கொடுமையை அனுபவித்து வந்த கன்னிகா, 8 வகுப்பிற்கு பிறகு பள்ளிக்கு செல்லவில்லை.

நடிகை கன்னிகா ரவி: குடும்பத்தின் வறுமை காரணமாக கன்னிகா தினமும் 20 ரூபாய் சம்பளத்திற்கு காட்டிற்கு வேலைக்கு போய் இருக்கிறார். அந்த வேலை மட்டுமில்லாமல், எந்த வேலையாக இருந்தாலும் முகம் சுழிப்பு இல்லாம கன்னிகா செய்து இருக்கிறார். கன்னிகா பார்ப்பதற்கு அழகாக இருந்ததால், நண்பர் ஒருவர் மூலம் கன்னிகாவிற்கு இசை அருவியில, கேளுங்க பசங்களா, ஹாய் குட்டீஸ் போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் நடிகையாக வேண்டும் என்ற ஆசையும் கன்னிகாவிற்கு அப்போது தான் மனதில் வந்துள்ளத. இதற்காக பல ஆடிஷன்களில் கலந்து கொண்டுள்ளார்.
சீரியலில் நடிக்கும் வாய்ப்பு: அப்போது தான். கே. பாலச்சந்தரிடம் இருந்து ஆடிஷனில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அந்த ஆடிஷன்ல கலந்து கொண்ட கன்னிகாவிற்கு 'அமுதா ஒரு ஆச்சரியக் குறி' என்கிற சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் கலைஞர் தொலைக்காட்சியில் 2012 முதல் 2014 ம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கத்திலேயே 'சாந்தி நிலையம்'என்ற சீரியலில் நடித்தார். பின், 'கல்யாண வீடு' போன்ற சீரியல்களில் துணை கதாபாத்திரத்திலும், லீட் ரோலிலும் நடித்து வந்தார். லீட் ரோலில் நடித்து இருந்தாலும், நடிகையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் கன்னிகாவுக்கு எப்போதுமே உண்டு.

காணாமல் போன தாலி: ஆடிஷன் நிகழ்ச்சி ஒன்றில், கன்னிகாவை சினேகன் பார்த்து இருக்கிறார். கன்னிகாவின் தலைமுடியை பார்த்த சினேகனுக்கு பார்த்தவுடனே அவர் மீது காதல் வந்துள்ளது. முதல் பார்வையிலேயே காதல் வர அந்த காதலை வெளிப்படையாகவே கன்னிகாவிடம் சொல்லி இருக்கிறார் சினேகன். அதற்கு பதிலளிக்க 5 மாதங்களை எடுத்துக் கொண்டாராம் கன்னிகா. 2014 ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்தன்று வீடு முழுவதும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு அந்த வெளிச்சத்தில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் கன்னிகா. அந்த சந்திப்பின்போது கையில் தாலி, மஞ்சள் கயிறுடன் தனது காதலை தெரிவித்துள்ளார். அந்த தாலியை நீண்ட காலங்கள் பத்திரமாக வைத்து பாதுகாத்து வந்துள்ளார் கன்னிகா. ஆனால் அந்த தாலி திருட்டு போய் விட்டதாக அவர் பேட்டியில் வருத்தப்பட்டு கூறியிருந்தார்.
8 வருட காதல்: இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தாலும், அந்த காதலை பற்றி யாரிடமும் சொல்லாமல், ஒருவருக்கொருவர் மனதிலேயே வைத்து காதலித்துள்ளார்கள். இவங்க பொது இடங்களில் எப்போதுமே சந்தித்து பேசியதே இல்லையாம். இதனால் தான், இவங்களுடைய காதல் கதை வெளியில தெரியாமலே 8 வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து, 2022ம் ஆண்டு கமலஹாசன் தாலி எடுத்துக்கொடுக்க இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் அழகான இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைகளுக்கு காதல், கவிதை என அழகான தமிழ் பெயர் வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











