ரஜினிகாந்த் பிறந்தநாள்.. உங்கள் நேர்மை தான் என்னை வசீகரிக்கிறது.. கவிதையில் வாழ்த்து சொன்ன வைரமுத்து!
சென்னை: இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான இவர்,தொடர்ந்து 48 ஆண்டுகளாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவிற்கு வந்த புதிதில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரஜினி, இன்று அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.
தலைவர் 170: ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் படம் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.
காமன் டிபி: இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று என்பதால் அவரது ரசிகர்கள் காமன் டிபிஐ வெளியிட்டு வாழ்த்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமாத்துறையினர் மற்றும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
வைரமுத்து வாழ்த்து: இந்நிலையில், கவிஞர் வைரமுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், தங்களுக்குத் தேவையான ஏதோ ஒரு மின்னூட்டம் உங்களிடம் உள்ளதாக மக்கள் நம்புகிறார்கள் அதை மிக்க விலைகொடுத்துத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நம்பிக்கையை காப்பாற்றுவேன்: கலை என்ற பிம்பத்தைவிட உங்கள் நிஜவாழ்க்கையின் நேர்மைதான் என்னை வசீகரிக்கிறது. எதையும் மறைத்ததில்லை என்னிடம் நீங்கள், பலம் பலவீனம் பணம் பணவீனம் எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்.
உடல் மனம் வயது கருதி நீங்கள் எடுத்த அரசியல் முடிவு உங்கள் அமைதிக்கும் ஆரோக்கியத்துக்கும் வாழ்க்கையெல்லாம் வழிவகுக்கும். வாழ்த்துகிறேன் விரும்பும்வரை வாழ்க என கவிபேரசு வைரமுத்து தனது பாணியில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications