சம்பளத்தை குறைத்துக் கொடுத்த தயாரிப்பாளர்.. அப்புறம் என்ன நடந்தது.. வைரமுத்து பகிர்ந்த விஷயம்!

சென்னை: பாடலாசிரியர், கவிஞர் என பன்முகத் திறமையுடன் செயல்பட்டு வரும் கவிஞர் வைரமுத்து பல ஆண்டுகளாக சினிமாவிற்கு பாடல்கள் எழுதி வருபவர். இவரது தனித்துவமான பாடல்கள் ரசிகர்களின் இதயம் தொட்டவை. இவரின் மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்துவும் சினிமாவிற்கு பாடல்கள் எழுதி வருகின்றனர். தனியாக புத்தகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இதனிடையே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தற்போது நீண்ட நெடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பன் உடனான தன்னுடைய சம்பளம் குறித்த அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

vairamuthu rm veerappan

கவிஞர் வைரமுத்து: கோலிவுட்டின் மிகச்சிறப்பான பாடலாசிரியராக தொடர்ந்து பல காலங்களாக செயல்பட்டு வருபவர் கவிஞர் வைரமுத்து. பொன்மாலைப் பொழுதில் துவங்கிய இவரது பயணம் தற்போதும் நீடித்து வருகிறது. தொடர்ந்து சில சர்ச்சைகளிலும் இவரது பெயர் அடிபட்டாலும் பாடலாசிரியர், கவிஞர் என அடுத்தடுத்து ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வருபவர் வைரமுத்து. இவரது மகன்கள் கபிலன் வைரமுத்து, மதன் கார்க்கியும் சிறப்பான கவிஞர்களாக, பாடல் ஆசிரியர்களாக செயல்பட்டு வருகின்றனர். இதில் மதன் கார்க்கி ஒருபடி மேலே சென்று படங்களுக்கு டயலாக் ரைட்டிங்கையும் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.

பாட்ஷா படத்தின் பாடல்கள்: பல முன்னணி படங்கள் இவரது டயலாக்கில் மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியுள்ளன, இவர்கள் இருவரும் ஒரு புறம் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் வைரமுத்துவின் பயணத்தையும் தடை செய்ய முடியவில்லை. சமூக வலைதளங்களிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இன்றைய தினம் நீண்ட நெடிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அவர் ரஜினிகாந்தின் பாட்ஷா படம் குறித்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த படத்தின் பாடல்களை எழுதுவதற்கு தன்னை தயாரிப்பாளர் ஆர்.எம் வீரப்பன் அணுகியபோது தான் தனக்கு சம்பளமாக 50,000 வேண்டும் என்று கேட்டதாகவும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

சம்பளத்தை குறைத்து கொடுத்த ஆர்எம்வீ: இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆர்எம் வீரப்பன், கவிஞர்களுக்கு அவ்வளவு தொகை கொடுப்பதில்லை என்றும் ஒரு பாடலுக்கு 500, 1000 ரூபாய் மட்டுமே கொடுப்பது வழக்கம் என்றும் கூறியதையும் வைரமுத்து கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய சம்பளத்தை தான் கூறிவிட்டேன், அதன் பிறகு உங்கள் இஷ்டம் என்று தான் கூறியதாகவும், இதற்கு பதிலளித்த ஆர்எம்வீ, பாடல்களை எழுதுங்கள் பார்க்கலாம் என்று கூறியதாகவும் வைரமுத்து தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். தான் அனைத்து பாடல்களையும் எழுதி முடித்தவின்பு, தான் கேட்ட சம்பளத்தில் 5000 ரூபாய் குறைத்து 45,000 ரூபாயாக அவர் கொடுத்ததாகவும் தான் எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டதாகவும் வைரமுத்து கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது: இதனிடையே பாட்ஷா படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது என்றும் இந்த வெற்றிக்கு பாடல்களும் மிகப்பெரிய காரணமாக இருந்ததாகவும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தான் ஒரு சமயம் நாகேஸ்வரராவ் பார்க்கில் உட்கார்ந்து பாட்டெழுதிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அந்த வழியாக சென்ற கார் நின்று அதிலிருந்தவர் தன்னை ஆர்எம்வீ சந்திக்க விரும்புவதாக கூறியதாகவும் வைரமுத்து மேலும் குறிப்பிட்டார். தான் அவரை அலுவலகத்தில் சென்று சந்தித்த நிலையில், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கி 5,000 ரூபாயை அவர் கொடுத்ததையும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என்றும் அவர் முத்தாய்ப்பாக இந்த பதிவை முடித்துள்ளார். அந்தப் பணத்தை தான் அன்பளிப்பாக வழங்கியதையும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X