இதை என்னனு புருஞ்சுக்கிறது.. சின்ன சின்ன கண்கள் பாடலுக்கு வைரமுத்துவின் மார்க் இதுதான்!

சென்னை: தமிழ் சினிமாவின் உச்சநடிகர்களில் ஒருவராக உள்ள விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என கூறப்படுகின்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார். தி கோட் படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களைப் பெற்றது. இந்நிலையில் விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது பாடல் கடந்த 22ஆம் தேதி வெளியிடப்பட்டது.

சின்ன சின்ன கண்கள் எனத் தொடங்கும் இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். மிகவும் மெலடியாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாடலில், மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. பாடலின் முதல் பாதி பவதாரிணியின் குரலில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 .41 நிமிடங்கள் அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக விஜய் குரலில் மெலடி பாடல் என்பதால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Vairamuthu The GOAT

80-களில் ஆட்சி: பாடல் ஒருபுறம் ஹிட் அடிக்க, பாடலை எழுதிய கபிலன் வைரமுத்து குறித்த செய்தியும் அவரது பேட்டியும் தீயாக பரவி வருகின்றது. 80களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர்கள் பெயர் பட்டியலில் இளையராஜா, பாரதிராஜா மற்றும் வைரமுத்து ஆகியோரது பெயர் இருக்கும். ஆனால் ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் கூட்டணி பிரிந்தது மட்டும் இல்லாமல், இளையராஜாவுடன் பாரதிராஜாவும், வைரமுத்தும் இணைந்து பணியாற்றவே இல்லை. கருத்து வேறுபாட்டினை மறந்து ஒருகட்டத்தில் பாரதிராஜாவும் இளையராஜாவும் இணைந்து விட்டார்கள். ஆனால் இன்றும் கீரியும் பாம்புமாக இருப்பது, இளையராஜாவும் வைரமுத்துவும்தான்.

சர்ச்சையான வைரமுத்து பேச்சு: அண்மையில் கூட ஞானி என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு, இளையராஜாவை மறைமுகமாக தாக்கிப் பேசியதாக வைரமுத்து மீது விமர்சனங்கள் பாய்ந்தது. ஆனால் இதுதொடர்பாக வைரமுத்து தரப்பில் விளக்கம் எதுவும் கொடுத்துக்கொள்ளப்படவில்லை. ஆனால் இளையராஜாவும் கண்டுகொள்ளவில்லை. இளையராஜாவின் தம்பி, கங்கை அமரன் வைரமுத்துவை கண்டபடி திட்டி மேடை ஒன்றில் பேசியிருந்தார்.

Vairamuthu The GOAT

சின்ன சின்ன கண்கள்: இந்நிலையில் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கி, இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடலுக்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளது திரைத்துறையில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், பாடல் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதும் கவனம் பெற்றுள்ளது.

பாடலைப் பாராட்டிய வைரமுத்து: அதேநேரத்தில், பாடல் குறித்து பாடல் ஆசிரியர் வைரமுத்து, " பாடல் ரொம்பவும் நல்லா இருக்கு. ரொம்ப நாள்க்கு பிறகு ஓரு இனிமையான பாட்டு. மகிழ்ச்சியாக இருக்கு என கபிலன் வைரமுத்துவிடம் கூறியுள்ளார். மேலும், அப்பாக்கள் முரண்பட்டு நிற்கின்ற நேரத்தில் மகன்கள் இணைந்து சூப்பர் டூப்பர் ஹிட் பாடலைக் கொடுத்துவிட்டனர் என்ற பேச்சும் பாடலுக்கு கமெண்ட்டுகளும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Vairamuthu The GOAT

எது சிறந்தது: அதற்கு பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து, " அப்பாக்கள்குள்ள கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனா, அவங்களும் ஒரு காலத்துல நண்பர்களா இருந்தவர்கள்தான். நண்பர்கள் என்றாலே கருத்து மோதல்கள், வேறுபாடுகள் இருப்பது இயல்புதான். விமர்சிப்பவர்கள் சின்ன சின்ன கண்கள் பாடலில் இருக்கும் 'உறவெல்லாம் ஒன்றாக' எனும் வரிகளை பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள் எனக் பதில் அளித்துள்ளார். ரசிகர்கள் தரப்பில் இளையராஜாவைத் திட்டுகின்றார், அவரது மகனின் இசையில் இவரது மகன் பாடல் எழுதுகின்றார். அதற்கு வைரமுத்துவும் நல்லா இருக்குனு சொல்றார். இதில் இசை சிறந்ததா இல்லை வரிகள் சிறந்ததா என ரசிகர்கள் வைரமுத்துவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X