twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு சீலா… உண்மையில் நடந்தது என்ன?

    |

    சென்னை : கவிபேரரசுவின் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?

    சென்னை மாநகராட்சிக்கு கொரோனா காலத்தில் செலுத்தாத சொத்து வரியை வைரமுத்து செலுத்தியுள்ளார். 8 லட்ச ரூபாய் அளவிற்கு அவர் சொத்துவரி செலுத்தியதால் அதிகாரிகள் சீல் வைக்கும் முடிவை கைவிட்டுள்ளனர்.

    Lyricist Vairamuthu Paid Property Tax for after 4 years

    சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு சொந்தமான திருமண மண்டபம் பொன்மணி மாளிகை இயங்கி வருகிறது. அது 27 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த நான்கு வருடங்களாக நோட்டீஸ் கொடுத்தும் மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரியை செலுத்தாமல் காலம் தாழ்த்தியதால் நேற்று காலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திருமண மண்டபத்திற்க்கு சீல் வைக்க வந்துவிட்டதாக இணையத்தில் செய்திகள் பரவின.

    ஆனால், கொரோனா காலத்தில் கட்டாத வரியை தான் அதிகாரிகள் வசூலிக்க வந்தார்கள் என்றும். இதையடுத்து வைரமுத்து செலுத்த வேண்டிய 7 லட்சத்து 93 ஆயிரத்து 241 ரூபாய் சொத்து வரியை மண்டப மேலாளர் மூலம் வங்கி வரைவோலையாக மாநகராட்சிக்கு உடனடியாக செலுத்தினார். இதனால், வைரமுத்துவின் திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைக்கும் முடிவைக் கைவிட்டனர். வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு சீல் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவியது. ஆனால், உண்மை தெரிந்ததும் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    English summary
    Vairamuthu Paid Property Tax for after 4 years, சென்னை மாநகராட்சி சொத்து வரி நிலுவைத்தொகையை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு செலுத்தினார் பாடலாசிரியர் வைரமுத்து செலுத்தினார்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X