எனக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஒரு பந்தம் இருக்கு: சூர்யா ரசிகரிடம் சொன்ன பாடலாசிரியர் விவேக்

சென்னை: பாடலாசிரியர் விவேக்கிடம் கோபித்துக்கொண்ட சூர்யா ரசிகருக்கு விவேக் பதிலளித்துள்ளார்.

ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. பாடல் வெளியாகி நான்கரை மணி நேரத்தில் 3.1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது.

Lyricist Vivek about Vijay fans love!

"சிம்டாங்காரன்" என்ற வார்த்தையை கேள்விபட்டதுமே அது மீதான எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. அந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று தேடியே ட்ரெண்ட் செய்ய வைத்துவிட்டார் பாடலாசிரியர் விவேக். கவர்ந்து இழுப்பவன்/ பயமற்றவன்/ துடுக்கானவன் என விளக்கமளித்ததோடு "கண் சிமிட்டாம ஒருவரை பார்க்க தோணுமே.. அந்த ஒருவன் தான் சிம்டாங்காரன் எனக் குறிப்பிட்டார்.

வசந்த் என்ற ரசிகர் ஒருவர், சூர்யாவின் 38வது படத்துக்கும் நீங்க பாட்டு எழுதுறீங்க. ஆனா விஜய் ரசிகர்கள்கிட்ட மட்டும் பேசுறீங்களே, எங்களுக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்க ப்ரோ என மனம் திறந்து கேட்டுவிட்டார்.

அதற்கு பதிலளித்துள்ள விவேக், அப்படியெல்லாம் கிடையாது. நான் எல்லோரிடமும் பேசுவேன். இரண்டு வருடம் ஒன்றாக ட்ராவல் பண்ணிருக்கோம். நிறைய அழகான தருணங்கள் உண்டு. அவர்கள் அளவிடமுடியாத அன்பையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த அன்பு எனக்கும் இருக்கும்ல அதான் ஒரு தனி பிணைப்பு. உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X