மாப்ளேய்.. வணக்கம்டா மாப்ள டிவிட்டர்லேர்ந்து.. ரசிகர்களுடன் பாடலாசிரியர் ஜாலி பேச்சு!
சென்னை: பாடலாசிரியர் விவேக் ரசிகர்களுடன் ஜாலி பேச்சில் ஈடுபட்டு வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பாடலாசிரியர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவராக வலம் வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு ரிலிஸாக உள்ள சும்மா கிழி பாடலை பாடலாசிரியர் விவேக்தான் எழுதியிருக்கிறார்.
இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி வருகிறது. யூட்யூப்பில் வெளியானதுமே பல மில்லியன் வியூஸ்களை அள்ளி பட்டையை கிளப்பி வருகிறது சும்மா கிழி பாடல்.

ரசிகர்களுடன் பேச்சு
இதேபோல் பாடலாசிரியர் விவேக், விஜய் உட்பட முன்னணி நடிகர்கள் பலருக்கும் பாடல் எழுதி வருகிறார். அவ்வப்போது டிவிட்டரில் ரசிகர்களுடனும் ஜாலியாக பேசி வருகிறார் விவேக்.
டிவிட்டர்லேருந்து..
அந்த வகையில் இன்று காலையிலேயே மாப்ளேய்.. வணக்கம்டா மாப்ள டிவிட்டர்லேர்ந்து.. என ஒரு பதிவை போட்டார். அவ்வளவுதான்.. ரசிகர்கள் பலரும் வணக்கம்டா மாப்ளேய்.. ரோட்லேருந்து.. வீட்லேருந்து.. காலேஜ்லேருந்து.. என வரிசையாய் பதில் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
தூக்கத்துலேருந்து..
மாப்ளேய்.. வணக்கம் டா மாப்ள தூக்கத்துலேர்ந்து.. என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
காலேஜ்லேருந்து..
வணக்கம் மாப்ளே.. காலேஜ்லேருந்து.. என்று தெரிவித்திருக்கிறார் இந்த ரசிகர்.
வீட்லேருந்து..
வணக்கம்டா மாப்ளே வீட்லேருந்து.. என தெரிவித்திருக்கிறார் இவர்.
ரோட்டுலேருந்து
வணக்கம்டா மாப்ளே.. ரோட்டுலேருந்து என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
சிதம்பரத்துலேருந்து..
வணக்கம் டேய் மாப்ளே.. சிதம்பரத்துலேருந்து.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
தஞ்சாவூரிலிருந்து..
வணக்கம் டா மாப்ள தஞ்சாவூரிலிருந்து இது உனக்குத்தான்டா.. வரவர நீ யாருக்குமே கமென்ட் பண்ண மாட்டேங்கிறீங்க கேள்விப்பட்டேன் ஒழுங்கா எல்லாருக்கும் கமெண்ட் பண்ணிவிடு சொல்லிவிட்டேன் என்கிறார் இந்த நெட்டிசன்.

கர்வமின்றி பதில்
இதுபோல் பலரும் பாடலாசிரியர் விவேக்கின் டிவிட்டுக்கு பதில் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொருவரின் பதிலுக்கும் பாடலாசிரியர் விவேக்கும் எந்த கர்வமும் இன்றி அழகாய் பதிலளித்து வருகிறார்.
தொப்பி.. தொப்பி..
குட்மார்னிங் அண்ணா என கிறிஸ்துமஸ் தாத்தாவின் தொப்பியை போட்ட நெட்டிசனுக்கு.. ரஜினி ஸ்டைலில் தொப்பி தொப்பி என பதில் கொடுத்திருக்கிறார் விவேக்.

குவியும் லைக்ஸ்..
பாடலாசிரியர் விவேக் இப்படி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை ரசிகர்களும் வரவேற்று வருகின்றனர். இதனால் விவேக் எந்த டிவிட் போட்டாலும் லைக்ஸ் குவிகிறது.


Click it and Unblock the Notifications











