சிங்கப் பெண்ணே பாடல் பிரபலத்துக்கு லவ்லி கிஸ் கொடுத்த விஜய்... ட்ரெண்டாகும் போட்டோ
சென்னை: விஜய்யின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.
லியோ டைட்டில் ப்ரோமோ வீடியோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்தது.
விஜய் - லோகேஷ் கனகராஜ் காம்போ இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிங்கப் பெண்ணே பாடல் பிரபலத்துக்கு விஜய் முத்தம் கொடுத்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

லியோ ஷூட்டிங்கில் விஜய்
பொங்கல் ரேஸில் களமிறங்கிய விஜய்யின் வாரிசு திரைப்படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. அதே உற்சாகத்தில் அடுத்த ஹிட் கொடுக்க ரெடியாகிவிட்டார் விஜய். ரெஸ்ட்டே இல்லாமல் உடனடியாக லோகேஷ் இயக்கும் லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றுவிட்டார். சென்னையை தொடர்ந்து காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ செகண்ட் ஷெட்யூல் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் அன்பு முத்தம்
லியோ படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், ஜார்ஜ் மரியான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் ஆகியோரும் விஜய்யுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பாடலாசிரியர் விவேக் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு செம்ம பாசிட்டிவ் வைப் கொடுத்துள்ளார். விஜய் தனக்கு அன்பாக முத்தம் கொடுக்கும் போட்டோ தான் அது.

வார்த்தைகளால் விவரிக்க முடியாது
ட்விட்டரில் அந்த போட்டோவை ஷேர் செய்துள்ள பாடலாசிரியர் விஜய், "சில உறவுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த நம்ப முடியாத பயணத்தில் நீங்கள் என்னிடம் மூத்த சகோதரரைப் போல அன்பும் ஆதரவும் அளித்திருந்தீர்கள். என் கலைப் பயணத்தில் இந்த அழகான தருணத்தை எதனாலும் வெல்ல முடியாது. லவ் யூ தளபதி" என்று குறிப்பிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

ஆளப்போறான் தமிழன்
மெர்சல், பிகில், சர்கார், வாரிசு என தொடர்ந்து விஜய்யின் படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார் விவேக். மிக முக்கிமாக ஆளப்போறான் தமிழன், சிங்கப்பெண்ணே போன்ற பாடல்கள் விஜய் - விவேக் காம்போவில் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக அமைந்தன. பொங்கலுக்கு ரிலீஸான வாரிசு படத்தில் பாடல்கள் மட்டுமின்றி, வசனங்களையும் விவேக் தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு வசனங்கள் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், விவேக்கிற்குள் ஒரு இயக்குநர் இருப்பதாகவும் விரைவில் அவரை இயக்குநராக பார்க்கலாம் எனவும் தெரிவித்திருந்ததார்.


Click it and Unblock the Notifications











