திரைக்கதை எழுதும் பாடலாசிரியர் விவேக்…தனுஷ் படத்தின் புது அப்டேட்!
சென்னை: தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளிவரவுள்ள பெயரிடப்படாத படம் #D43.
இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜீ. வி. பிரகாஷ் இசையமைக்க, சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படகுழுவில் புதிய திருப்பமாக பாடலாசிரியர் விவேக் திரைக்கதை எழுதவுள்ளார்.

கார்த்திக் நரேனுடன் கூட்டணி
இந்த படத்தின் கதையை கார்த்திக் நரேனுடன் சேர்ந்து ஷர்ஃபு, சுஹாஸ் ஆகியோர் துணை எழுத்தாளராக எழுதி உள்ளனர். இருவரும் மலையாளம் சினிமாவில் சிறந்த கதை எழுத்தாளர்கள் இந்த கூட்டணி கார்த்திக் நரேனுடன் இணைவது #D43 கதைக்கு வலு சேர்க்கிறது.

திரைக்கதை & வசனம்
இதுவரை பாடலாசிரியராக இருந்த விவேக் முதல் முறையாக கார்த்திக் நரேனுடன் சேர்ந்து திரைக்கதை, வசனம் எழுத உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. #D43 படகுழுவினருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வாய்ப்புக்கு நன்றி கூறியும் விவேக் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

விவேக்-க்கு வரவேற்பு
தனுஷின் நடிப்பில் வெளிவரவுள்ள ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள "ரகிட்ட ரகிட்ட" பாடலுக்கு வரிகள் எழுதியவர் விவேக். அந்த பாடல் 2020ல் மிக பெரிய வெற்றியடைய அதிலிருந்து தனுஷ் ரசிகர்கள் விவேக்-ஐ கொண்டாடினர் அதை தொடர்ந்து இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் #D43 படக்குழுவினருடன் இணைந்து எப்போது பணியாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும், படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்பையும் தனுஷ் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











