இப்படி காயப்படுத்தாதீங்க.. விவேக்கிடம் சண்டை போட்ட அஜித் - விஜய் ரசிகர்கள்.. நெத்தியடி பதில்!
Recommended Video
சென்னை: பாடலாசிரியர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் அஜித் ரசிகர்கள் சண்டை குறித்து செய்துள்ள டிவிட்கள் எல்லாம் பெரிய வைரலாகி உள்ளது.
கடந்த சில நாட்கள் முன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதில் விஜய் குறித்தும் அஜித் குறித்தும் அவர் பதில் அளித்து இருந்தார்.
இதில் விஜயை சூப்பர் என்றும், அஜித்தை தன் நண்பர் என்றும் ஷாருக்கான் குறிப்பிட்டு இருந்தார். அவரின் இந்த பதில்கள் இணையம் முழுக்க பெரிய வைரலானது.

பதில்
இந்த இரண்டு பதிலையும் பாடலாசிரியர் விவேக் ரீ டிவிட் செய்து இருந்தார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. பாடலாசிரியர் விவேக் விஜய் படங்களுக்கு பாடல் எழுதி வருகிறார். வரிசையாக நிறைய விஜய் படங்களுக்கு அவர் பாடல் எழுதி உள்ளார்.

சண்டை
அப்படி இருக்கும் போது அவர் ஏன் அஜித் குறித்த டிவிட்டை ரீ டிவிட் செய்கிறார் என்று விஜய் ரசிகர்கள் சண்டை போட்டனர். வரிசையாக விஜய் ரசிகர்கள் பலர் பாடலாசிரியர் விவேக்கிடம் சென்று கடுமையாக சண்டை போட்டனர்.

அஜித் எப்படி
அதே சமயம் அஜித் ரசிகர்களும் பாடலாசிரியர் விவேக்கிடம் சண்டை போட்டனர் . நீங்கள் விஜய் படத்திற்கு பாடல் எழுதுபவர். அஜித்தை பற்றி நீங்கள் டிவிட் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என்று சண்டை செய்தனர்.

மோசம்
இதனால் இணையத்தில் நீண்ட நேரம் சண்டை நீடித்தது. அதன்பின் பாடலாசிரியர் விவேக் இது தொடர்பாக விளக்கம் அளித்தார். இரண்டு பேருக்கும் சேர்த்து மொத்தமாக அவர் விளக்கம் அளித்தார்.
என்ன விளக்கம்
அதில், இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்க அடிச்சிக்கணும்னு நினைக்கிறவங்கதான் இங்க ஜாஸ்தி. ஆனால் நீங்க சண்டை போட கூடாதுன்னுதானே தல, தளபதி இரண்டு பேரும் நினைக்கிறாங்க.

எப்படி
நீங்க நல்ல இருக்கணும்னு நினைக்கிற பத்து பேரையும் இப்படி புண்படுத்தாதீங்க. அப்பறம் ஒரு தகவல், உங்களால் என்னை காயப்படுத்த முடியாது. எனக்கு வலிமையா இதயம் இருக்கிறது, என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











