தனுஷ் படத்திலிருந்து அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்... என்னதான் காரணம்?

சென்னை : நடிகர் தனுஷின் மாறன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

படத்தின் தனுஷ் பத்திரிகையாளராக நடித்துள்ளார். படத்தின் டயலாக்குகள் மிகவும் அழுத்தமாக காணப்படுகின்றன.

மாறன் படம்

மாறன் படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் மாறன். இந்தப் படத்தில் அவர் பத்திரிகையாளராக நடித்துள்ளார். படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷிற்கு இத்தகைய கதாபாத்திரங்கள் எப்போதுமே சிறப்பாக பொருந்தும்.

சிறப்பான ட்ரெயிலர்

சிறப்பான ட்ரெயிலர்

சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரில் தனுஷ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இடம்பெற்றிருந்த காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தன. மேலும் ஸ்மிருதி வெங்கட்டிற்கும் படத்தில் மிகவும் முக்கியமான கேரக்டர் என்பது ட்ரெயிலர் மூலமே தெரியவந்துள்ளது. அவர் தனுஷின் தங்கையாக நடித்துள்ளார்.

அழுத்தமான வசனங்கள்

அழுத்தமான வசனங்கள்

துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலரில் டயலாக்குகளும் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. மக்களுக்கு உண்மையை கொண்டுபோய் சேர்க்கிற மாதிரி நாம எழுதனும், நாம எழுதறது உண்மை, யோசிக்கக்கூடாது என்பது போன்ற அழுத்தமான டயலாக்குகள் படத்தில் இடம் பெற்றுள்ளன.

மிரட்டல் வில்லன்

மிரட்டல் வில்லன்

படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார் சமுத்திரகனி. மேலும் மகேந்திரன், அமீர், பிரவீன், கிருஷ்ணகுமார், பாலசுப்ரமணியன் போன்றவர்களும் நடித்துள்ளனர். தொடரி, பட்டாஸ் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷுடன் இந்தப் படம் மூலம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

படத்திலிருந்து வெளியேறிய விவேக்

படத்திலிருந்து வெளியேறிய விவேக்

படத்தின் டயலாக் மற்றும் திரைக்கதையை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள நிலையில் தற்போது படத்திலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார். கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாக மாறன் படத்திலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தன்னுடைய வளர்ச்சிக்கு மாறன் தொடக்கப்புள்ளியாக இருந்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்

அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு இரட்டை மொழிகளில் உருவாகிவரும் வாத்தி படத்திலிருந்து சமீபத்தில் ஒளிப்பதிவளர் தினேஷ் கிருஷ்ணன் விலகிய நிலையில் தற்போது மாறன் படத்திலிருந்து விவேக் விலகியுள்ளது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தனுஷ் படத்திலிருந்து விலக இவர்கள் காரணங்களை கூறினாலும் என்னதான் நடக்கிறது என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X