Don't Miss!
- News
"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
- Automobiles
புதிய இ-பைக்கிற்காக இத்தாலி நிறுவனத்தோட இணைந்த ஒகினவா... உலகளவில் 50 டெக்னீசியன்களையும் களமிறக்க திட்டம்!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பேஸ்புக் நேரலையில் கவிஞர் விவேகா.. இன்று மாலை 7 மணிக்கு!
சென்னை : இன்று மாலை 7 மணிக்கு பேஸ்புக் நேரலையில் தனது ரசிகர்களை சந்திக்கிறார் கவிஞர் விவேகா .
தமிழ் சினிமாவில் பாடல்கள் என்பது மிகவும் முக்கியமான ஓர் அங்கமாக இருந்து வருகிறது. பல படங்களின் வெற்றிக்கு அப்படத்தில் வரும் பாடல்கள் மிக முக்கிய காரணங்களாக இருந்திருக்கின்றன. அப்படிப்பட்ட திரை இசைப்பாடல்களை எழுதுவது சாதாரண விஷயம் கிடையாது கொடுக்கப்பட்ட மெட்டுக்கு ஏற்றார் போல் அதேசமயம் இயக்குனர் கூறிய சூழ்நிலைக்கு தகுந்தாற்போல பாடல் எழுத வேண்டும்.

நமது தமிழ் சினிமாவில் பல பாடலாசிரியர்களும் கவிஞர்களும் இருப்பது நாம் அறிந்த ஒன்றே. அவ்வாறு இந்த இளைய தலைமுறையினருக்கு ஏற்றார்போல் பாடல் எழுதுவதில் கெட்டியானவர் கவிஞர் விவேகா. 'நீ வருவாய் என' என்ற படத்தில் வரும் பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா என்ற பாடல் வரிகளை எழுதி அறிமுகமானார் விவேகா.
கந்தசாமி, வேதாளம், காஞ்சனா2 போன்ற பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவர்கள் இன்று மாலை 7 மணி அளவில் பேஸ்புக் லைவ் மூலம் தனது ரசிகர்களை சந்திக்க இருக்கிறார். ரசிகர்கள் பல நாட்களாக கேட்க வேண்டும் என்று நினைத்திருந்த கேள்விகளை இந்த நேரலையில் கேட்கலாம்.
வேறொருவரிடம்
கொடுத்தார்..
தயாரித்து
வந்த
படத்தில்
இருந்து
திடீரென
விலகிய
இயக்குனர்
ராஜமவுலி
மகன்!
அது மட்டும் அல்லாமல் எதிர்காலத்தில் திரைத்துறையில் பாடல்கள் எழுத வேண்டும் என்ற ஆசையில் உழைத்துக்கொண்டு இருக்கும் பலருக்கு திரை இசை பாடல்களை எழுதுவது எப்படி மற்றும் இந்த துறையில் பல காலம் கால் ஊன்றி நிற்பது எப்படி போன்ற பல சுவாரசியமான தகவல்களை அவர் கொடுக்க இருக்கின்றார்.
ஆரம்ப காலத்தில் சிறிய படங்கள் மற்றும் சிறிய கதாநாயகர்களுக்கு பாட்டு எழுதி வந்த விவேகா தனது தனித்துவமான பாடல் எழுதும் முறையை வைத்து ரசிகர்கள் நெஞ்சில் இடம்பிடித்து இப்பொழுது பெரிய ஹீரோக்களான அஜித், விஜய் போன்றவர்களுக்கும் பாட்டு எழுதும் அளவிற்கு தன்னை தானே உயர்த்திக் கொண்டுள்ளார்.
கவிதை எழுதுவதிலும், பாட்டு எழுதுவதிலும் ஆர்வம் உள்ள ரசிகர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் கேள்விகளையும் தாங்களாகவே நேரலையில் கேட்டு தெரிந்து கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி, விஸ்வாசம், சிங்கம் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கும் விவேகா அவர்கள் ஒரு படி மேலே சென்று தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் "அண்ணாத்த" திரைப்படத்திலும் பாடல் எழுதி இருப்பதாக தெரிகிறது.
அதனால் "அண்ணாத்த" திரைப்படத்தின் அப்டேட்ஸ் எதுவும் இவரிடம் இருந்து கிடைக்குமா என்று ரஜினி ரசிகர்கள் பலரும் இந்த நேரலைகாக காத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.