கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்…பாடலாசிரியர் விவேகா போட்ட ட்வீட்!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் பீரியட் மற்றும் நவீன யுகத்துடன் தொடர்புடைய படமாக பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. இப்படம் பார்த்த விவேகா படம் பார்த்து மெய்சிலிர்த்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட சூர்யா நடிக்கும் படங்கள் சூப்பராக வெளியானாலும் அந்த இரு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றன. அந்த படத்தை தொடர்ந்து, விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐந்து நிமிடமே அந்த படத்தில் வந்தாலும், ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அந்த கேரக்டர் இருந்தது. இந்த படத்திற்கு பிறகு சூர்யாவின் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சூர்யாவின் கங்குவா: சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தை ஸ்டுடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். இயக்குநர் சிவா மற்றும் அணியினர் இந்தப் படத்தை எழுதி இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.
10 மொழிகளில்: திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இப்படத்தை சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியிட இருப்பதாகவும், ஓடிடியில் 20 மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு ரிலீஸ்: மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில், அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாபி தியோல், 'உதிரன்' எனும் கேரக்டரில் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர் உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெய்சிலிர்த்தேன்: இந்நிலையில் கங்குவா படம் பார்த்த பாடல் ஆசிரியர் விவேகன் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம், இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம். இந்த சிறந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் பெருமையாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











