நீ நெனச்சது எல்லாம் ஒவ்வொண்ணா ஏன் நடக்குது தன்னால.. அஜித்தை பாராட்டும் பாடலாசிரியர் விவேகா!
சென்னை: தமிழ்நாடு மாநில துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற நடிகர் அஜித்துக்கு பிரபல பாடலாசிரியரான விவேகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ் போட்டோகிராபி என்றும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார் அஜித்.

துப்பாக்கி சுடுதல் பயிற்சியில்
தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்தார் அஜித்.

முதலிடம்..
அந்த போட்டோக்கள் அண்மையில் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில் நடிகர் அஜித் 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

பாடலாசிரியர் விவேகா
இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாடலாசிரியரான விவேகா நடிகர் அஜித்துக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

ஏன் நடக்குது தன்னால..
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், 46வது தமிழ்நாடு மாநில ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ள அஜித் சாருக்கு வாழ்த்துகள். நீ நெனச்சது எல்லாம்
ஒவ்வொண்ணா ஏன் நடக்குது தன்னால..

பூ தூவட்டும் உன் மேல
மேல் இருக்குற மேகம் ஓயாம பூ தூவட்டும் உன் மேல... இவ்வாறு பதிவிட்டுள்ளார் விவேகா. மேலும் அஜித் கழுத்தில் மெடலுடன் இருக்கும் போட்டோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பாடலாசிரியர் விவேகா.


Click it and Unblock the Notifications











