'ஊ சொல்றியா' பாடலை தியேட்டர்களில் ஆண்கள் கொண்டாடுகிறார்கள்.. சர்ச்சை குறித்து மனம் திறந்த விவேகா!
சென்னை: ஊ சொல்றியா பாடலை திரையங்குகளில் ஆண்கள் கொண்டாடுவதாக பாடலாசிரியர் விவேகா தெரிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடித்திருந்தார்.
அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகரான ஃபகத் பாஸில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.

பாவாடை ஜாக்கெட்டுடன் ஆட்டம்
இந்தப் படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா என்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடியிருந்தார். படு கிளாமராக பாவாடை ஜாக்கெட்டுடன் ஆட்டம் போட்டிருந்தார் சமந்தா. இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியான போதே செம ஹிட்டானது.

ஆண்களை தவறாக சித்தரித்து..
அதேநேரத்ததில் இந்தப் பாடலுக்கு ஆந்திரா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் எதிர்ப்பும் எழுந்தது. ஆண்களை தவறாக சித்தரிக்கும் வகையில் இந்த பாடல் வரிகள் உள்ளதாக கூறி ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த பாடலை நீக்க வேண்டும் என்றும் குரல்கள் வலுத்தன.

ஆண்கள் கொண்டாடுகிறார்கள்
இந்நிலையில் அந்த சர்ச்சைகளுக்கு பாடலாசிரியர் விவேகா தற்போது பதில் அளித்துள்ளார். அதாவது சில ஆண்கள் இந்த பாடலுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்கலாட். ஆனால் திரையரங்குகளில் ஆண்கள் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

100 மில்லியன் வியூஸ்
தமிழில் ஊ சொல்றியா மாமா.. என்றும் தெலுங்கில் ஊ அண்டவா மாவா என்றும் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டது. இதேபால் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் அந்தந்த மொழியில் இப்பாடல் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் யூட்யூப்பில் இந்தப் பாடல் 100 மில்லியன் வியூஸ்களை குவித்துள்ளது. இதற்காக நடிகை சமந்தா ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
Recommended Video

வசூலை குவிக்கும் படம்
புஷ்பா திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகம் அண்மையில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூலை குவித்து வருகிறது. இநிலையில் இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











