இரண்டு லட்டு குட்டிக்கும் முதல் பிறந்த நாள்.. தடபுடலாக கொண்டாடிய சினேகன்!

சென்னை: பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பல திறமைகளை கொண்டவராக இருக்கிறார் சினேகன். இவர் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவருக்கு இரட்டை குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருந்தனர். தற்போது காதல், கவிதையின் முதல் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடி உள்ளார்.

'புத்தம் புது பூவே' படத்தில் பாடல் எழுதியதன் மூலம் சினிமாவில் பாடலாராசிரியராக அறிமுகமானார் சினேகன். அந்த பாடலைத் தொடர்து பாண்டவர் பூமி படத்தில் வரும், அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா போன்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதோடு இல்லலாமல் இளசுகளை ஆட்டம் போட வைக்கும், ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா, ஞாபகம் வருதே, இவர் எழுதிய பாடல்கள் ரசிகர்ள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தது. பாடல் ஆசிரியராக 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கும் இவர், இயக்குநர் அமீர் நடித்த யோகி என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகம் ஆனார்.

snehan kannika snehan Birthday
Photo Credit:

நடிகர் சினேகன்: திரைக்கு பின்னால் பாடல் ஆசிரியராக மட்டுமே ஜொலித்துக்கொண்டு இருந்த சினேகன் மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் 2வது இடத்தை பிடித்த இவர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக மாறினார். அதன் பின் 2021ஆம் ஆண்டு நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுக்க அவர் தலைமையில் திருமணம் நடந்தது.

snehan kannika snehan Birthday
Photo Credit:

பூவுக்கு பிறந்த நாளு: இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகளான நிலையில், கடந்த ஆண்டு கன்னிகாவிற்கு இரட்டை பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு காதல்,கவிதை என அழகான தமிழ் பெயர் வைத்தார். தற்போது செல்ல மகள்களுக்கு முதல் பிறந்த நாள் வந்துள்ளது. முதல் பிறந்த நாள் விழாவை நேற்று சினேகன், கன்னிகா தம்பதியினர் சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோக்களை சினேகனோ, கன்னிகாவோ இணையத்தில் பதிவிடவில்லை. ஆனால், அந்த விழாவில் கலந்து கொண்ட சில பிரபலங்கள் போட்டோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். பலரும் குட்டி பாப்பாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X