தாயே எந்தன் மகளாக.. மகளே எந்தன் தாயாக.. இருதேவதைகள்.. சினேகன்-கன்னிகா ஜோடிக்கு ட்வின்ஸ்!

சென்னை: கவிஞர் சினேகன் பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பல திறமைகளை கொண்டவராக இருக்கிறார். இவர் நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னிகாக கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இருவரும் கூட்டாக அறிவித்திருந்தனர். தற்போது இவர்களுக்கு அழகான குழந்தை பிறந்து இருப்பதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

புத்தம் புது பூவே படத்தில் பாடல் எழுதியதன் மூலம் சினேகன் சினிமாவில் பாடலாராசிரியராக அறிமுகமானார். அந்த பாடலைத் தொடர்து பாண்டவர் பூமி படத்தில் வரும், அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், தோழா தோழா போன்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அது மட்டுமில்லாமல் இளசுகளை ஆட்டம் போட வைக்கும், ஆடாத ஆட்டமெல்லாம், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா, பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை, ஞாபகம் வருதே, ஆராரிராரோ நான் இங்கே இங்கே பாட என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். இதையடுத்து, இயக்குநர் அமீர் நடித்த யோகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உயர்திரு 420 திரைப்படத்திலும் கதாநாயகனாக அவதாரமெடுத்தார்.

snehan baby

நடிகர் சினேகன்: திரைக்கு பின்னால் பாடல் ஆசிரியராக மட்டுமே ஜொலித்துக்கொண்டு இருந்த சினேகனை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியது பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய போதும், காயத்ரி, நமீதா, ஓவியா, ஜூலி என அனைவரையும் கட்டிப்பிடித்து ஆறுதல் கூறியதால், இவரை கட்டிப்புடி சினேகன் என இணையவாசிகள் கிண்டலடித்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் 2வது இடத்தைப் பிடித்தார்.இதையடுத்து, இயக்குநர் அமீர் நடித்த யோகி, உயர்திரு 420 திரைப்படத்திலும் கதாநாயகனாக அவதாரமெடுத்தார்.

snehan baby

பிக்பாஸ் சீசன்1: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சினேகன், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக மாறினார். 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், 2021ம் ஆண்டு ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

காதல் திருமணம்: சினேகன், 2021ஆம் ஆண்டு நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுக்க அவர் தலைமையில் திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் 10 வருடம் வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்தும் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆனநிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னிகா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு இருந்தார்.

snehan baby

ட்வின்ஸ்:இந்நிலையில், சினேகன் தனதுஇன்ஸ்டாகிராமில் குழந்தை பிறந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்,

"இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற "

என்ற எனது அன்பின் கோரிக்கை

இரட்டிப்பாய் நிறைவேறியது...

தாயே எந்தன் மகளாகவும் ..

மகளே எந்தன் தாயாகவும் ...

இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள் ...

இதயமும்,மனமும்

மகிழ்ச்சியில் நெகிழ்ந்து

நிரம்பி வழிகிறது ...

உங்களின் தூய அன்பினால்

எங்கள் வாரிசுகளை

வாழ்த்துங்கள் என பதிவிட்டுள்ளார்.இரட்டை குழந்தைக்கு தந்தையான சினேகனுக்கு ரசிகர்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X