twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கோச்சடையான்... காலம் கடந்தும் பேச்சுடையான்!'

    By Shankar
    |

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தீம் பாடல் வரிகள் வெளியாகியுள்ளன. கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த வரிகள் ஒவ்வொன்றும் ரஜினி ரசிகர்களை மட்டுமல்ல, கேட்கும் அத்தனை பேரையும் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

    தளபதி படத்தில் இடம் பெற்ற தளபதி.. எங்கள் தளபதி... என்ற பாடலின் பாணியில் இந்த கோச்சடையான் தீம் பாடலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    பாடலின் ஆரம்பம் அப்படி இருந்தாலும், அடுத்தடுத்த வரிகளில் கேட்பவரை பரவசப்படுத்தும் வகையில் உள்ளது இந்தப் பாடல்.

    பாடல் வரிகள்..

    பாடல் வரிகள்..

    கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
    கொன்றை சூடும் கோச்சடையான்
    கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
    கோள்கள் கடந்தும் வீச்சுடையான்
    கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
    காற்றை கடந்தும் மூச்சுடையான்
    கோச்சடையான் எங்கள் கோச்சடையான்
    காலம் கடந்தும் பேச்சுடையான்
    கோச்சடையான் எங்கள் கோச்சடையான்

    ரஜினியின் ருத்ர தாண்டவம்

    ரஜினியின் ருத்ர தாண்டவம்

    இந்தப் பாடல் குறித்து கவிஞர் வைரமுத்து கூறுகையில், "இது ரஜினி ருத்ர தாண்டவம் ஆடும் காட்சிக்கான பாடல். அத்தனை அற்புதமாக வந்துள்ளது.

    ஆரம்பத்தில் வெறும் தீம் பாடலாகத்தான் இதைக் கையாள நினைத்தார்கள். ஆனால் அப்படிச் செய்தால், ரஜினி எனும் அற்புத கலைஞரின் ருத்ர தாண்டவ நடனம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் இந்த பாடலை காட்சியாகவும் மாற்றினார்கள்.

    ஆச்சர்யப்படுத்திய ரஜினி

    ஆச்சர்யப்படுத்திய ரஜினி

    ரஜினி அத்தனை ஈடுபாட்டுடன் இந்தப் பாட்டுக்கு நடனமாடியுள்ளார். சினிமா ரசிகர்கள் அத்தனை பேரையும் கட்டிப் போடும் இந்தக் காட்சியும் பாடலும்.

    எங்கே போகுதோ வானம்

    எங்கே போகுதோ வானம்

    ஏற்கெனவே வைரமுத்து எழுதிய இன்னொரு பாடலான எங்கே போகுதோ வானம் பாடலும் வரிகளும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது நினைவிருக்கலாம்.

    English summary
    Here is the theme song lyrics of Rajini's Kochadaiiyaan written by Vairamuthu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X