twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது… லதா மங்கேஷ்கர் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் !

    |

    சென்னை : இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது, இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்து விட்டது என லதா மங்கேஷ்கர் மறைவுக்கு வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் | Latha Mangeshkar Biography

    கலையுலகில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தனது தேன்குரலால் மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருந்த லதா மங்கேஷ்கரின் மறைவு ரசிகர்களை சொல்லொன்னா துயரத்தில் அழ்த்தி உள்ளது.

    லதா மங்கேஷ்கரின் தீவிரரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலரும் இணையத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ராணுவ வீரர்களுக்காக, கொரோனா பாதித்த காலங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த லதா ராணுவ வீரர்களுக்காக, கொரோனா பாதித்த காலங்களில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த லதா

    மூத்த பாடகி லதா மங்கேஷ்கர்

    மூத்த பாடகி லதா மங்கேஷ்கர்

    இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர். அவருக்கு வயது 92. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மருத்துவமனையில்

    மருத்துவமனையில்

    கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக் கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    உயிர் பிரிந்தது

    உயிர் பிரிந்தது

    இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். மத்திய மந்திரி நிதின் கட்காரி அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். பின்னர் சிறிது நேரத்தில் லதா மங்கேஷ்கர் காலமானதாக தெரிவிக்கப்பட்டது.

    இசைக்குயில் பறந்துவிட்டது

    லதாமங்கேஷ்கர் மறைவுக்கு பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் , இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது, இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்து விட்டது. லதா மங்கேஷ்கரின் பெருமை என்னவென்றால், தான் வாழ்ந்த காலத்தின் மீது, தன்னுடைய இசை என்ற ஆதிக்கதை செலுத்தியது அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல ஓட்டுக்குடிக்கும்.

    இசை அரசி

    இசை அரசி

    உழைக்கும் மக்கள் அவர் பாடல் கேட்டு, தங்கள் கண்ணீரை துடைத்துக்கொண்டு இருக்கிறார்கள், காதலை வளர்ந்து இருக்கிறார்கள், தங்கள் வேர்வையை சுண்டி எறிந்து இருக்கிறார்கள், தங்கள் துக்கத்தை மறந்து இருக்கிறார்கள், மகிழ்ச்சியில் ஆடி இருக்கிறார்கள். இந்தியர்களின் வாழ்வோடு தன்னை பிணைத்துக்கொண்ட அந்த மாபெரும் இசை அரசியின் புகழ் வாழ்க, அவர் பாடல்கள் வெல்க என வைரமுத்து வீடியோ பதிவின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    English summary
    Lyrics Vairamuthu condoles lata mangeshkars demise
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X