twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு குற்றம் இல்லாத மனிதன் கோவில் இல்லாத இறைவன் - எம்.ஜி.ஆர் ரசிகரின் பதிவு

    |

    சென்னை: ஒருவருக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால், அதை உடனே செய்துவிடவேண்டும், நேரம் காலம் பார்க்கக்கூடாது, புயலோ மழையோ எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தன்னுடைய உதவி தேவைப்பட்டவருக்கு அந்த உதவியை செய்து முடித்த பின்பு தான் எம்.ஜி.ஆருக்கு சாப்பாடே இறங்கும்.

    எட்டாவது வள்ளல் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆரின் கொடை குணத்தைப் பற்றி சொல்லக் கேட்டவர்கள் அதை எல்லாம் நம்பாமல், அதெல்லாம் சும்மா, கட்டுக்கதை என்று தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நேரடியாக அந்த அனுபவம் ஏற்படும் வரைதான். அதாவது கடவுளை நம்பாதவர்களக்கு அந்த கடவுள் தான் தன்னை காப்பாற்ற நேரடியாக வந்தது என்பதை அறியும்போது ஏற்படும் அனுபவம் தான் எம்.ஜி.ஆர் என்னும் கோவில் இல்லாத இறைவனைப் பற்றி அறியும்போதும் ஏற்படும்.

    எம்.ஜி.ஆர் என்று சொன்னாலே அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு தானாகவே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதுபோலத்தான் அவரை நம்பாமல் கெட்டவர்கள் தான் இருக்கிறார்களே தவிர, அவரை நம்பி அவருடைய வீட்டுக்கதவை தட்டிய யாருமே ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற வரலாறு கிடையாது. எம்ஜிஆரின் உதவும் குணம் பற்றி ஒரு ரசிகர் எழுதியுள்ளார் படியுங்கள்.

    விக்ரம் வேதா இந்தி ரீமேக்: வேதாவாக அமீர்கான் விக்ரமாக சயீப் அலிகான் சும்மா பட்டைய கிளப்புமா விக்ரம் வேதா இந்தி ரீமேக்: வேதாவாக அமீர்கான் விக்ரமாக சயீப் அலிகான் சும்மா பட்டைய கிளப்புமா

    உதவும் வரை நிம்மதி ஏது

    உதவும் வரை நிம்மதி ஏது

    எம்.ஜி.ஆர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

    எம்.ஜி.ஆரின் உதவியாளர்

    எம்.ஜி.ஆரின் உதவியாளர்

    அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

    கை விரித்த நண்பர்கள்

    கை விரித்த நண்பர்கள்

    கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத்தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கேட்டார் கோபாலகிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

    எம்.ஜி.ஆர் உதவி செய்வாரா

    எம்.ஜி.ஆர் உதவி செய்வாரா

    என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல்லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

    ஸ்டுடியோவில் காத்திருப்பு

    ஸ்டுடியோவில் காத்திருப்பு

    அப்போது, எம்.ஜி.ஆர் வாஹினி ஸ்டுடியோவில் பட்டிக்காட்டு பொன்னையா படப்பிடிப்பில் இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர், சோகத்துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்.

    எம்.ஜி.ஆர் ஆறுதல்

    எம்.ஜி.ஆர் ஆறுதல்

    கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலைமையை எம்.ஜி.ஆர் தெரிந்துகொண்டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தனது நிலைமையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

    ஏன் இவ்வளவு லேட்டா வந்தீங்க

    ஏன் இவ்வளவு லேட்டா வந்தீங்க

    அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர், ‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை என்று அவரை அன்போடு கடிந்துகொண்டார். வாடகை பாக்கி எவ்வளவு? என்று கேட்டார். மூவாயிரம் ரூபாய் என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு போகச் சொன்னார். அவரும் எம்.ஜி.ஆரின் உதவியாளரிடம் தன்னுடைய முகவரியை கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிட்டார்.

    இந்த மழையில் உதவி வருமா

    இந்த மழையில் உதவி வருமா

    எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

    மழையிலும் தேடிவந்த உதவி

    மழையிலும் தேடிவந்த உதவி

    அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசாரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

    மழையுடன் போட்டி போட்ட ஆனந்தக் கண்ணீர்

    மழையுடன் போட்டி போட்ட ஆனந்தக் கண்ணீர்

    இதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங்களையே வைத்துக்கொள்ளச் சொன்னார் என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரிவித்தனர். நன்றிப் பெருக்கில் மழையுடன் போட்டியிட்டபடி, கோபாலகிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. பின்னர் அவருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன். அப்போது பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒரு பாட்டு அந்த மழையின் சத்தத்தையும் தாண்டி ஒலித்தது அவருடைய காதுகளில் கேட்டபோது அவருடைய ஆனந்தக் கண்ணீர் மேலும் அதிகரித்தது.

    அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை
    அந்த வாசலில் காவல்கள் இல்லை
    அவன் கொடுத்தது எத்தனை கோடி
    அந்தக் கோமகன் திருமுகம் வாழி... வாழி

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர் சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம் என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்.

    English summary
    If you want to help someone, you should do it right away, no time limit, no matter the storm or the rain, MGR will come to the aid of the person who needs his help.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X