Stalin X Vijay: விஜய்யின் TVKவை முடிக்கிறோம்.. CM ஸ்டாலின் செம்ம ஜாலியா இருக்காறேப்பா

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பங்கேற்றதால் தேர்தல் களம் வழக்கத்தைக் காட்டிலும் விறுவிறுப்பாகவும் கொஞ்சல் கலர்ஃபுல்லாகவும் இருந்தது. கட்சி தொடங்கிய நாளில் இருந்து தேர்தல் நடக்கும் வரை திமுக எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டுமே பிரதான அரசியலாக முன் எடுத்து வந்தார், விஜய். ஆனால் திமுக இதற்கு பெரிய அளவில் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால் தற்போது தேர்தல் முடிந்த பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஸ்டைலில் ரியாக்ட் செய்துள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 23ஆம் தேதி தேர்தல் முடிந்ததும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 25ஆம் தேதி கொடைக்கானலுக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பொது மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்தார். அப்போது, சிறுமி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் செல்பி எடுத்துக் கொண்டார். மேலும் அப்போது இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டு சில வாரங்களுக்குள் முதலமைச்சர் தனது கூட்டணி கட்சியினருடன் தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தையை முடித்து விட்டு,செல்லும் போது, ஒரு கையால் முடிந்தது என்று சைகை காட்டினார்.

M K Stalin s Playful Gesture on Vijay s TVK Goes Viral

தவெகவை முடிக்கிறோம்: அது இணையத்தில் மிகவும் வேகமாக வைரலானது. இந்நிலையில் கொடைக்கானலில் இளம் பெண் உடன் செல்பி வீடியோ எடுக்கும் போது, அந்த இளம் பெண் தவெகவை முடிக்கிறோம் என்று கூற, மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தான் செய்தது போல சைகையால் கூறுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்த வீடியோவை பகிர்ந்த இணையவாசிகள் மற்றும் திமுகவினர் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்ம ஜாலியாக இருக்கிறார் போல என்றும் கேப்ஷன் இட்டு வீடியோவைப் பகிர்ந்து வருகிறார்கள்.

அரசியல் களம்: திமுகவுக்கு இந்த தேர்தல் எளிதாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளுகிற தேர்தல் என்று சில அரசியல் ஆய்வாளர்களும், விஜய் வருகையால் திமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்றும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இன்னும் சிலர், இந்த தேர்தலை கணிப்பது முழுக்க முழுக்க சிரமம், தேர்தல் முடிவுகள் வந்தால் தான் எதுவுமே கூற முடியும் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X