இனிமே பீச்சுக்கு காத்து வாங்க போவீங்க.. மிரட்டும் நைட் ஷியாமளனின் OLD டிரைலர்.. திகிலடைய தயாரா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: சும்மா பீச்சுக்கு ஜாலியா போயிட்டு வரும் போது உங்களுக்கு திடீரென முதிர்ச்சி ஏற்பட்டால் எப்படி திகிலடைவீர்கள்.. அப்படியொரு அனுபவத்தை தர காத்திருக்கிறது இயக்குநர் நைட் ஷியாமலனின் OLD படம்.

டைட்டிலிலேயே படத்தின் மையக் கருவை சொன்ன விதத்திலேயே பாராட்டுக்களை அள்ளி வருகிறார் நைட் ஷியாமலன்.

இந்த மாதம் ஓல்டு படம் வெளியாகும் நிலையில் தற்போது அதன் டிரைலர் டிரெண்டாகி வருகிறது.

பாண்டிச்சேரி ஆளு

பாண்டிச்சேரி ஆளு

புதுவை, மாஹேவில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் இயக்குநர் நைட் ஷியாமலன். தி சிக்ஸ்த் சென்ஸ், சைன்ஸ், தி லாஸ்ட் ஏர்பெண்டர், ஆஃப்டர் எர்த், கிளாஸ் உள்ளிட்ட திரில்லர் படங்களை இயக்கி பிரபலமான இவர், அடுத்ததாக ஓல்டு எனும் திகிலூட்டும் படத்தை இயக்கி உள்ளார்.

டிரெண்டாகும் டிரைலர்

டிரெண்டாகும் டிரைலர்

கடந்த மே 27ம் தேதி வெளியான ஓல்டு டிரைலர் உலகளவில் டிரெண்டாகி வருகிறது. 7 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் அந்த டிரைலரை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர். வரும் ஜூலை 23ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், அதன் ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

டைட்டிலிலேயே கதை

டைட்டிலிலேயே கதை

ஜாலியாக கோடை விடுமுறையை கழிக்க தீவு ஒன்றுக்கு செல்லும் குடும்பத்தினர், அந்த கடற்கரையில் ஒரே நாளில் கொஞ்சம் கொஞ்சமாக வயதானவர்களாக மாறத் தொடங்குகின்றனர். குழந்தைகள் எல்லாம் இளைஞர்களாகவும், இளைஞர்கள் முதியவர்களாகவும் மாற அவர்களுக்குள் பயம் தொற்றிக் கொள்கிறது. டைட்டிலிலேயே OLD என கதையை கூறியுள்ளார் இயக்குநர்.

வயதாகும் மர்மம்

வயதாகும் மர்மம்

இப்படி ஒரே நாளில் தனது குடும்பத்தினர் வயதானவர்களாக மாறுவதை கண்டு அனைவரும் அச்சம் கொள்கின்றனர். மேலும், இந்த தீவில் தான் ஏதோ மர்மம் இருப்பதாக அங்கிருந்து வெளியேற போராடுகின்றனர். ஏற்கனவே அந்த தீவுக்கு வந்த சில சுற்றுலா பயணிகளின் சடலங்கள் அவர்களை மேலும் திகிலூட்டுகின்றன. இந்த தீவில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதை காண வரும் ஜூலை 23 வரை காத்திருங்கள்!

மர்ம நாவல்

பிரெட்ரிக் பீட்டர்ஸ் மற்றும் பியரி ஆஸ்கர் லெவி இணைந்து எழுதிய மர்ம நாவலான சாண்ட்கேஸ்டில் கதையை தழுவி இந்த ஓல்டு திரைப்படத்தை இயக்குநர் நைட் ஷியாமலன் இயக்கி உள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கத்தில் அற்புதமான த்ரில்லர் படைப்பாக இந்த படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Read more about: டிரைலர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X