முதல் பட ஷூட்டிங் ஸ்டில்.. ஹாலிவுட் இயக்குனரின் சென்னை ஞாபகம்.. படம் இவ்வளவு நாள்தான் ஓடுச்சாம்!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: சென்னையில் தனது முதல் பட ஷூட்டிங்கை நடத்தியபோது எடுக்கப்பட்ட போட்டோவை, பிரபல ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் மாஹேவில் பிறந்தவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமளன்.

இவரது பெற்றோர் மருத்துவர்கள். மனோஜூக்கு 6 வயதாக இருக்கும்போது அவர்கள் அமெரிக்கா சென்றார்கள்.

ஆஸ்கர் விருதுக்கு

ஆஸ்கர் விருதுக்கு

பென்சில்வேனியாவில் வளர்ந்த மனோஜ், 1999 ஆம் ஆண்டு 'தி சிக்ஸ்த் சென்ஸ்' படம் மூலமாக மிகவும் பிரபலமானார். சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான இது, சிறந்த இயக்குனர், சிறந்த படம் என ஆறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. புரூஸ் வில்லிஸ், டோனி கொலட்டே, ஒலிவியா வில்லியம்ஸ் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்குப் பிறகு, தொடர்ந்து பல படங்களை இயக்கினார் மனோஜ் நைட் ஷியாமளன்.

பிரேயிங் வித் ஆங்கர்

பிரேயிங் வித் ஆங்கர்

புரூஸ் வில்லீஸ், சாமுவேல் ஜாக்சன், ராபின் ரைட் பென் நடித்த அன்பிரேக்கபிள், சயின்ஸ்பிக்சன் ஹாரார் படமான சைன்ஸ், தி வில்லேஜ், தி லாஸ்ட் ஏர்பென்டர், ஆஃப்டர் எர்த், ஸ்பிளிட், கிளாஸ் உட்பட பல படங்களை இயக்கினார். ஆனால், இவரது முதல் படம், 1992 ஆம் ஆண்டு இயக்கிய, பிரேயிங் வித் ஆங்கர் (Praying with Anger). மனோஜ் நைட் ஷியாமளன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் இது.

சில வாரங்கள்

சில வாரங்கள்

இந்தப் படத்துக்கு மது அம்பாட ஒளிப்பதிவு செய்திருந்தார். மைக் முத்து, ரிச்சா அஹுஜா, சுஷ்மா அஹுஜா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட போட்டோவை, சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் அவர். '21 வயதில், சென்னையில் நான் எனது முதல் படத்தை இயக்கியபோது. அந்த படம், 2 தியேட்டர்களில் சில வாரங்கள் மட்டுமே ஓடியது. நொறுங்கிவிட்டேன்' என்று கூறியுள்ளார்.

புதுச்சேரியில் பிறந்தவன்

புதுச்சேரியில் பிறந்தவன்

இதற்கு ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருவர், இந்த நைட் இளமையாக இருக்கார் பாருங்க என்று கூறியுள்ளார். சிலர், உங்கள் படங்கள் அனைத்தும் அருமை என்று தெரிவித்துள்ளனர். 'நான் புதுச்சேரியில் பிறந்தவன். இன்னும் என் உறவினர்கள் அங்கு உள்ளனர். இந்தியாவில் என் படங்களின் ஷூட்டிங்கை நடத்த ஆர்வமாக இருக்கிறேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார், மனோஜ் நைட் ஷியாமளன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X