கமலுடன் கைகோர்க்கும் காமெடி ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்!

By Shankar

கமலின் அடுத்த படமான உத்தம வில்லனுக்கு வசனம் எழுதப் போகிறவர் யார் தெரியுமா... இயக்குநர் எம் ராஜேஷ்.

பொதுவாக கமலின் காமெடி படங்களுக்கு கிரேசி மோகன்தான் ஆஸ்தான வசனகர்த்தாவாக இருந்தார்.

விஸ்வரூபம்-2' படத்திற்கு பிறகு கமல்ஹாசன், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முதல்முறையாக இப்படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கிறார் சந்தானம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க காமெடிதான். கமலுக்கு காமெடி வில்லன் பாத்திரம்.

M Rajesh join with Kamal for the first time

இப்படத்தில் கிரேசி மோகனுக்கு பதிலாக, காமெடி பட ஸ்பெஷலிஸ்டான இயக்குனர் எம்.ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

ராஜேஷ்-சந்தானம் கூட்டணியில் அமைந்த வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம் என்பதால், கமலுடன் சந்தானம் இணையும் இப்படத்துக்கு ராஜேஷையே வசனம் எழுத அழைத்துள்ளனர்.

கமல் நடிப்பில் காமெடி படமாக வெளிவந்து வசூலிலும் ரசிகர் மனதிலும் பெரிய இடத்தை பிடித்த 'பம்மல் கே.சம்பந்தம்' , 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' ஆகிய படங்களைப்போல் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறும் என நம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X