தேசிய விருது வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்.. ஏன் என கேட்ட கமல்ஹாசன்.. இப்படி சொல்லிருக்காரே

சென்னை: பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை சமீபத்தில் வென்றார் எம்.எஸ்.பாஸ்கர். அவர் தேசிய விருது வென்றது தானே வென்றது போன்ற உணர்வை கொடுக்கிறது என பலரும் சொன்னார்கள். இந்நிலையில் இயக்குநர் நடிகருமான ரமேஷ் கண்ணாவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

டப்பிங் ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என சினிமாவில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்துகொண்டிருந்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சினிமாவில் நினைத்தபடி எடுத்ததும் வாய்ப்புகள் வரவில்லை. ஒன்றிரண்டு படங்களில் நடித்த அவருக்கு சின்னத்திரை பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி உள்ளிட்ட சீரியல்களில் எல்லாம் அவர் ஏற்றிருந்த வேடங்களை மிகச்சிறப்பாக செய்தார்.

மிகச்சிறந்த நடிகர்: சினிமாவில் அவருக்கு டும் டும் டும் திரைப்படம்தான் ஓரளவுக்கு பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு நகைச்சுவை கேரக்டர், குணசித்திர வேடங்கள் என எதை கொடுத்தாலும் அசால்ட்டாக நடித்து பெயர் வாங்கக்கூடியவராக விளங்குகிறார். வரிசையாக தனது திறமையை அவர் நிரூபித்துக்கொண்டே இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு மகா நடிகனுக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைக்காமல் இருக்கிறதே என ரசிகர்களே நொந்துகொண்டார்கள்.

M S Baskar Open Talks about Kamal Haasan Here are Full Details
Photo Credit:

தேசிய விருது பெற்ற பாஸ்கர்: பல வருட ஏக்கம் தீரும் விதமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பாஸ்கருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. அவர் விருது வென்றதை தாங்களே விருது வென்றதுபோல் பலரும் கொண்டாடுகிறார்கள். அனைவருமே அவருக்கு வாழ்த்து கூறினார்கள். இந்நிலையில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அவர் கொடுத்த பேட்டி: இயக்குநரும் நடிகருமான ரமேஷ் கண்ணாவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் கொடுத்த பேட்டியில், "கமல் எனக்கு ஃபோன் செய்தார். எங்கே என்ன நடக்குது என்றார். நான் ஷூட்டிங்கில் இருக்கிறேன் அண்ணா என்று சொன்னேன். சரி நியூஸ்லாம் பார்ப்பது இல்லையா என சொன்னார். அதற்கு நான் ஆமா அண்ணா பார்க்கிறேன். எனக்கு தேசிய விருது கொடுத்திருக்கிறார்கள் என்று கூறினேன்.

ஏன் என கேட்ட கமல்: உடனே அவரோ ஏன் என்று கேட்டார். நான் அதற்கு ஏன் கொடுத்தார்கள் என கேட்கிறீர்களா என கேட்டதற்கு; இல்லை ஏன் இவ்வளவு லேட் சொல்லிவிட்டு; விருது வாங்கியதால் வேலையிலும், சின்சியாரிட்டியிலும் கொஞ்சம்கூட குறை வைத்துவிடக்கூடாது என்று சொன்னார். கண்டிப்பாக அண்ணா என சொல்லி ஃபோனை வைத்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X