எம்.எஸ்.பாஸ்கர் வீட்டில் விசேஷம்.. ஒரே நாளில் நடந்த விஷயம்.. மகள் ஐஸ்வர்யா எமோஷனல்.. குவியும் வாழ்த்து
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான குணசித்திர நடிகர்களில் ஒருவர் எம்.எஸ்.பாஸ்கர். நடிப்பில் பட்டையை கிளப்பும் அவருக்கு இந்த வருடம்தான் அங்கீகாரம் கிடைக்கும் விதமாக பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் அவரது மகள் ஐஸ்வர்யா எமோஷனலாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் போஸ்ட் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பல வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். அவருக்கு எடுத்ததுமே திரைத்துறையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் தலைகாட்டி கொண்டிருந்தார். பெரிய திருப்புமுனை எதுவும் அவருக்கு கிடைக்காமல் இருந்தாலும் திரைத்துறையிலிருந்து ஒதுங்காமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாக மாறினார். அப்படி அவர் ஏகப்பட்ட படங்களுக்கு டப்பிங் கொடுத்து தனது குரல் மூலமே தன்னை பற்றி பலரை பேச வைத்தார்.
சின்னத்திரையில் சூப்பர் வரவேற்பு: அப்படிப்பட்ட சூழலில்தான் சின்னத்திரை நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் அவர் ஏற்றிருந்த பட்டாபி கேரக்டர் பட்டி தொட்டியெங்கும் அவரை கொண்டு சேர்க்க; அடுத்தடுத்து சீரியல்கள் வாய்ப்பு கிடைத்தன. அப்படி அவர் நடித்த செல்வி, அரசி சீரியல்களும் ஹிட்டாகின. அதிலும் செல்வி சீரியலில் ஆண்டவர் லிங்கம் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து மிரளவிட்டார்.

திரைத்துறையில் வாய்ப்பு: சீரியல்களில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் அவருக்கு சான்ஸ்கள் கிடைக்க; விஜயகாந்த் நடிப்பில் உருவான எங்கள் அண்ணா திரைப்படம் அவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுக்க; அப்போதிருந்து இப்போதுவரை காமெடி ரோலிலும், குணசித்திர வேடங்களிலும் கலக்கிவருகிறார். எந்த கேரக்டரில் நடித்தாலும் அதுவாகவே அசால்ட்டாக மாறிவிடும் வல்லமை படைத்த அவர்; எந்த வட்டார மொழியையும் உடனே பிடித்து சரளமாக பேசக்கூடியவரும்கூட.
தேசிய விருது: பாஸ்கர் எக்கச்சக்க படங்களில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு தேசிய அளவில் எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் இருந்தது. ரசிகர்களும் அதுகுறித்து அவ்வப்போது பேசிவந்தார்கள். சூழல் இப்படி இருக்க பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டது. இப்போதாவது அவருக்கு அங்கீகாரம் கிடைத்ததே என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்நிலையில் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
என்ன போஸ்ட்: அதாவது பாஸ்கர் ஒரே நேரத்தில் இரண்டு கார்களை வாங்கியிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "வாழ்வதற்கு ஒருகாலத்தில் வீடு இல்லாமல் வறுமையில் வாடினோம். சொந்த வீடு இல்லாமல் நாளை எங்கே போய் வாழ்வது என்று தெரியாத நிலையிலிருந்து இப்போது ஒரே நாளில் இரண்டு கார்களை வாங்கும் அளவுக்கு வந்திருப்பது எளிய விஷயம் இல்லை. கடினமாக உழைத்த அப்பாவுக்கும், பணத்தை சேமித்து சிக்கனமாக செலவு செய்த அம்மாவுக்கும் கிடைத்த வெற்றி இது" என்று குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











