twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுதந்திர தினத்தன்று ஐ.நா.வில் எம்.எஸ்.ஸை கவுரப்படுத்தும் ஏ.ஆர். ரஹ்மான்

    By Siva
    |

    நியூயார்க்: சுதந்திர தினத்தன்று ஐ.நா.வில் மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியை கவுரவிக்கும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    50 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சிமியை ஐ.நா. தலைமையகத்தில் வந்து பாடுமாறு அப்போதைய செயலாளர் தாண்ட் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று சுப்புலட்சுமியும் ஐ.நா. தலைமையகத்தில் பாடி அசத்தினார்.

    இந்நிலையில் இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தன்று ஐ.நா.வில் எம்.எஸ். சுப்புலட்சுமியை கவுரவிக்கும் விதமாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஏ.ஆர். ரஹ்மான்

    ஏ.ஆர். ரஹ்மான்

    சுப்புலட்சுமியை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும் மறைந்த பாடகியை பெருமைப்படுத்தும் விதமாக ரஹ்மான் இன்னிசை நிகழ்ச்சியை நடத்துகிறார்.

    பெருமை

    பெருமை

    ஐ.நா.வில் கச்சேரி செய்த முதல் இந்தியர் எம்.எஸ். சுப்புலட்சுமி ஆவார். இந்நிலையில் ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்தும் இரண்டாவது இந்திய கலைஞர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார்.

    எம்.எஸ்.

    எம்.எஸ்.

    இந்த ஆண்டு எம்.எஸ். சுப்புலட்சுமியின் 100வது பிறந்தநாள் ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. தலைமயகத்தில் வரும் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை சுப்புலட்சுமியின் புகைப்படக் கண்காட்சி நடக்க உள்ளது.

    ரஹ்மான் இசை

    ரஹ்மான் இசை

    உலக தலைவர்கள் பேசிய ஐ.நா. அரங்கில் வரும் 15ம் தேதி ரஹ்மானின் இசை வெள்ளம் பாய உள்ளது. தனது இசை மூலம் ரஹ்மான் பாரத ரத்னா விருது வாங்கிய முதல் இசை கலைஞருக்கு கவுரவம் செய்ய உள்ளார்.

    English summary
    Legendary carnatic vocalist M. S. Subbulakshmi will be honoured at the United Nations next week on India’s 70th Independence Day by a performance by Oscar-winning composer A.R. Rahman at the world body’s iconic General Assembly.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X