»   »  “நவரச திலகம்” மா.கா.பா... கூட நடிக்கப் போவது சிருஷ்டி டாங்கே...!

“நவரச திலகம்” மா.கா.பா... கூட நடிக்கப் போவது சிருஷ்டி டாங்கே...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை காம்பியரரான மா.கா.பா.ஆனந்த் "நவரச திலகம்" என்ற புதிய திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.

சிவ கார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் காம்பியர்கள் ஒவ்வொன்றாக சினிமாவுக்குள் நுழைகிறார்கள்.

சிவ கார்த்திகேயனைப் போல இருக்கும் மா.கா.பா.ஆனந்துக்கு நாயகனாக இரண்டு படங்கள் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்று நவரச திலகம்.

மா.கா.பாவுக்கு ஜோடி:

மா.கா.பாவுக்கு ஜோடி:

பர்மா படத்தை தயாரித்த ஸ்டோன் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மா.கா.பா.ஆனந்துடன் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்.

இயக்குனராக காம்ரன்:

இயக்குனராக காம்ரன்:

மேலும், கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு ஆகியோரும் நடிக்கின்றனர். ராஜ்கபூர், பூபதி பாண்டியன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த காம்ரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

காமெடியும், குடும்பமும்:

காமெடியும், குடும்பமும்:

காமெடி கலந்த பேமிலி என்டர்டெய்ன்மெண்ட் என தனது படத்தை வரையறுத்துள்ளார், காம்ரன்.

60 சதவீத காட்சிகள் பினிஷ்:

60 சதவீத காட்சிகள் பினிஷ்:

பொள்ளாச்சியில் படத்தின் 60 சதவீத காட்சிகளை படமாக்கியுள்ளனர். அடுத்து திருச்சி, கும்பகோணம் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

English summary
TV comparer Anand acting in a new film named “Navarasa Thilakam”. Actress shristi joined with a protagonist in this film with Anand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil