கலர் கலராய் பிரச்சினைகள்... புதுமணத் தம்பதியின் முதல்வாரத்தைப் பேசும் ‘பஞ்சுமிட்டாய்’!

புதுமணத் தம்பதியின் முதல்வாரத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகப் பற்றி பேசுகிறது ‘பஞ்சுமிட்டாய்’

Recommended Video

புதுமணத் தம்பதியின் முதல்வாரத்தைப் பேசும் பஞ்சுமிட்டாய்- வீடியோ

சென்னை: நாயகனுக்கும் நாயகிக்குமான கணவன் மனைவி உறவில் நிற மாயத்தால் திருமணமான முதல் வாரத்திலேயே ஏற்படும் சிக்கலை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் பஞ்சுமிட்டாய்.

இயக்குனர் அமீரின் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.பி. மோகன், தற்போது பஞ்சுமிட்டாய் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

சின்னத்திரை புகழ் ம.கா.பா ஆனந்த் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், நிகிலா விமல், சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

முதல் வாரம் கதைக்களம்:

முதல் வாரம் கதைக்களம்:

திருமணமான ஒரு ஜோடியின் முதல் வாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழில் வெளிவந்துள்ள முதல் மாய எதார்த்த திரைப்படம் எனப் படக்குழுவினர் கூறுகின்றனர். நிச்சயமாக இப்படம் அனைவராலும் விரும்பத்தகும் அளவுக்கு ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.மோகன் கூறுகிறார்.

தனி நாயகன்:

தனி நாயகன்:

முன்னதாக கிருஷ்ணாவுடன் இணைந்து ‘வானவராயன், வல்லவராயன்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த மா.கா.பா ஆனந்த், இப்படத்தில் தனி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர, சென்ராயன், பாண்டியராஜன், தவசி, கலைராணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிற மாயம்:

நிற மாயம்:

வண்ணத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாயகனுக்கும் நாயகிக்குமான கணவன் மனைவி உறவில் நிற மாயத்தால் ஏற்படும் சிக்கலை சுவைபடச் சொல்லியிருக்கும் இப்படம் ‘மேஜிக்கல் ரியலிஸம்' எனபடும் மாய எதார்த்தத் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

கலர்ஸ்:

கலர்ஸ்:

ஜிகர்தண்டா,கம்மர்கட், பூவரசம் பீப்பி, ஆரஞ்சு மிட்டாய் என குழந்தைகளுக்கு பிடித்தமான படத்தலைப்பு வரிசையில் இப்படமும் சேர்ந்துள்ளது. பலரது பாராட்டுகளைப் பெற்ற கலர்ஸ் என்ற தனது குறும்படத்தை, தனது இன்னொரு குறும்படத்தின் கருவோடு இணைத்து எஸ்.பி.மோகன், இந்த பஞ்சுமிட்டாயை உருவாக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X