ஏ ராசா.. யுவன் மற்றும் இளையராஜா இசையில் நனைய தயாராகுங்கள்.. மாமனிதன் செகண்ட் சிங்கிள் நாளை ரிலீஸ்!
சென்னை: இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள 'ஏ ராசா' பாடல் நாளை வெளியாகிறது.
இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாமனிதன் படத்தின் செகண்ட் சிங்கிள் இது.
முன்னதாக வெளியான தட்டிப்புட்டா பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மாமனிதன்
விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி உள்ள இந்த படத்தில் வேட்டி, சட்டை அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் சிங்கிள்
இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இணைந்து முதன்முறையாக மாமனிதன் படத்திற்கு இசையமைத்துள்ளனர். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள தட்டிப்புட்டா தட்டிப்புட்டா பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பா. விஜய் வரிகளில் அந்த பாடல் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக
யுவன் சங்கர் ராஜா இசையில் இசைஞானி இளையராஜா தனது மாயக் குரலில் ஃபர்ஸ்ட் சிங்கிளை பாடி இருந்தார். முதன்முறையாக அப்பாவுடன் இணைந்து ஒரு படத்திற்கு இசையமைப்பது நிறைய பாடங்களை கற்றுத் தந்துள்ளதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்.

ஏ ராசா
இந்நிலையில், நாளை காலை 11.30 மணிக்கு மாமனிதன் படத்தின் இரண்டாவது பாடலான ஏ ராசா பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலில் யுவன் சங்கர் ராஜா பெர்ஃபார்ம் செய்துள்ள லிரிக் வீடியோ வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் விஜய்சேதுபதி தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

யுவன் ரசிகர்கள் குஷி
ஏ ராசா வீடியோ பாடலில் யுவன் சங்கர் ராஜாவின் பெர்ஃபார்மன்ஸை பார்க்கவும் யுவன் இசை மற்றும் குரலில் உருவாகி உள்ள ஏ ராசா பாடலில் மூழ்கி திளைக்கும் யுவன் ரசிகர்கள் இப்போதே ரெடியாகி வருகின்றனர். ஜகமே தந்திரம் பாடல் போல இந்த பாடல் முன்னதாக லீக் ஆகாமல் உரிய நேரத்தில் வெளியாக வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











