நள்ளிரவில் போன் செய்து பாராட்டிய ரஜினி.. யாருகிட்ட போய் சொல்வேன்.. நெகிழ்ந்துபோன சீனு ராமசாமி!
சென்னை : மாமனிதன் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நள்ளிரவில் போன் செய்து பாட்டினார். இந்த விஷயத்தை யாருகிட்ட போய் சொல்வது என்று தெரியாமல் தவித்தேன் என்று சீனு ராமசாமி நெகிழ்ந்து பேசினார்.

சீனு ராமசாமி
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4வது முறையாக இணைந்த படம் மாமனிதன்.
இந்த படத்தில் காயத்ரி, குரு சோமசுந்தரம், சாஜி சென், ஜூவல் மேரி, அனிகா, கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்துள்ளனர்

மாமனிதன்
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுவை மரப்பாலத்தில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் முதன் முறையாக இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

பாராட்டிய ரஜினி
இசைவெளியீட்டு விழாவில் பேசிய சீனு ராமசாமி, நள்ளிரவு 3 மணி அளவில் எனக்கு ஒரு போன் வந்தது. மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் நிறைந்து பாராட்டினார். விஜய்சேதுபதி,காயத்ரி நடிப்பு என ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு சொல்லி பாராட்டினார். நான் ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னேன் ரொம்ப தெம்பா இருக்கு சார், நன்றி என்றேன்.

யார் கிட்ட சொல்லுவேன்
இதையார் கிட்ட சொல்வது என்றே தெரியல, தூங்கிட்டு இருந்த மனைவியை எழுப்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாமனிதன் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார் என்று கூறி செல்போனை காண்பித்தேன் என்றார். தொடர்ந்து பேசிய சீனுராமசாமி, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இந்தப் படம் குழந்தை போல. யுவன், விஜய் சேதுபதி இல்லாமல் இந்தப் படம் நடந்திருக்காது. முழு ஈடுபாட்டுடன் இப்படத்தை தொடங்கினேன். இளையராஜாவுக்கு அர்ப்பணிக்கும் விதமாக இப்படம் இளையராஜா பிறந்த ஊரான பண்ணையபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.


Click it and Unblock the Notifications











