twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.. விஜய்சேதுபதிக்கு தேசிய விருது உறுதி.. ஷங்கரின் மாமனிதன் விமர்சனம்!

    |

    சென்னை: இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள மாமனிதன் படத்தை பாராட்டி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

    பொதுவாக எந்தவொரு நல்ல படங்கள் வெளியானாலும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட வெகு சில பிரபலங்கள் அந்த படைப்பை பாராட்ட தவறியதே இல்லை.

    இந்நிலையில், மாமனிதன் வெளியான இன்றே இயக்குநர் ஷங்கரிடம் இருந்து இப்படியொரு பாசிட்டிவான விமர்சனம் கிடைத்திருப்பது படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    Maamanithan Review: அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்.. மாமனிதன் விமர்சனம்! Maamanithan Review: அப்பன் தோத்த ஊர்ல.. புள்ளைங்க ஜெயிக்கிறது கஷ்டம்.. மாமனிதன் விமர்சனம்!

    எப்படியும் நடிக்கும் மாமனிதன்

    எப்படியும் நடிக்கும் மாமனிதன்

    ஹீரோவாகி விட்டேன் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும், பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து விட்டேன் இனி சின்ன பட்ஜெட் படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் சம்பளத்தை ராக்கெட் வேகத்தில் கூட்டிக் கொண்டே செல்வேன் என்றெல்லாம் இல்லாமல், நல்ல கதைகளையும் நல்ல மனிதர்களையும் தேடித் தேடி படம் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி எனும் மாமனிதன் என்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.

    மண்ணும் மனுஷனும்

    மண்ணும் மனுஷனும்

    போதைப் பொருள், பீரங்கி, ரத்தம் சொட்டச் சொட்ட இருக்கும் அரிவாள் என்றோ, கோடீஸ்வர ஹீரோ, ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிப்பது என்றெல்லாம் இல்லாமல், கிராமத்து மண்ணையும் மனுஷங்களையும் அழகாக இன்னமும் பாரதிராஜாவின் பழைய படங்களை பார்க்கும் ஃபீலிங்கை போர் அடிக்காமல் சொல்லும் கலையில் வித்தகராக திகழ்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற படங்கள் ஒர்க்கவுட் ஆகாது என்று பலரும் ஒதுக்கி வைக்கும் நேரத்திலும், தமிழ்நாடு இன்னமும் கிராமங்களும், கிராம மக்களும் அதிகமாக இருக்கும் பூமி தான் என்று அதற்கான கதையை படமாக எடுத்து அசத்தி வருகிறார்.

    பாசிட்டிவ் விமர்சனம்

    பாசிட்டிவ் விமர்சனம்

    சில குறைகள் இருந்தாலும், படம் பார்க்கும் ரசிகர்களை கண்கலங்க வைத்து விடும் அந்த மேஜிக்கின் காரணத்திற்காக பலரும் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றனர். கடைசி விவசாயி, காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம் என இந்த ஆண்டு இதுவரை ஹாட்ரிக் அடித்துள்ள விஜய்சேதுபதிக்கு மாமனிதன் படமும் வெற்றிப் படமாக மாறியுள்ளது கடந்த ஆண்டு கசப்புகளை தன்னால் எளிதில் கடக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

    ஷங்கருக்கு திருப்தி

    ஷங்கருக்கு திருப்தி

    இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது "மாமனிதன்.. ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை மனதிற்கு கொடுத்தது. இயக்குநர் சீனுராமசாமி தனது உள்ளத்தையும் உயிரையும் போட்டு இப்படியொரு அழகான கிளாசிக் படத்தை நமக்கு கொடுத்திருக்கிறார். விஜய்சேதுபதியின் அற்புதமான நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருதே கிடைக்கும் என்றும் இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை கதையோடு ஒன்றி நம்மைக் கட்டிப் போடுகிறது என தனது விமர்சனத்தையும் பாராட்டுக்களையும் முன் வைத்திருக்கிறார்.

    காயத்ரி நன்றி

    காயத்ரி நன்றி

    இயக்குநர் ஷங்கர் மாமனிதன் படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், அந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக (விக்ரம் படத்தில் யார் கழுத்தை கரகரவென அறுத்தாரோ) நடித்துள்ள காயத்ரி நன்றி கூறியுள்ளார். காயத்ரியும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

    English summary
    Director Shankar tweeted, "Maamanithan Got the satisfaction of watching a good film, Dir Seenuramasamy put his heart &soul and made this a realistic classic. VijaySethupathi ‘s brilliant performance deserves a national award.Music from Maestro ilaiyaraaja & yuvan shankar raja blended soulfully with the film."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X