விஜய் சேதுபதியின் மாமனிதன் விறுவிறு டப்பிங் - விரைவில் ரிலீஸ் #maamanithan

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பலமாதங்களாகியும் ரிலீஸ் தேதி எப்போது என்று வெளியிடாமல் இருந்தனர். டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதால் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி கைகோர்த்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

Maamanithan Movie dubbing starts says Seenu Ramasamy
மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. இப்படத்தின் டப்பிங் பணிகள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்த தகவலை சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டப்பிங் வித் மக்கள் செல்வன் என்று பதிவிட்டுள்ளார். இந்த படம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நல்ல கதைக்கருவான திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் ஓருவர் சீனு ராமசாமி. அவர் கடைசியாக எடுத்து வெளிவந்த தர்மதுரை மற்றும் கண்ணே கலைமானே ஆகிய இரண்டு திரைப்படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

சீனு ராமசாமி தனது அனைத்து திரைப்படத்திலும் மனித வாழ்வியல் மற்றும் வாழ்க்கை நடைமுறையை மையமாக வைத்து தான் இயக்குவார். அதுபோல இந்த திரைப்படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என்று சமீபத்தில் இயக்குநர் சீனு ராமசாமி தெரிவித்திருந்தார்.

மாமனிதன் படம் தவிர விஜய் சேதுபதி நடிப்பில், 'லாபம்', 'மாமனிதன்',தெலுங்கில் 'சைரா நரசிம்மா ரெட்டி', 'க/பெ.ரணசிங்கம்', முத்தையா முரளிதரனின் பயோபிக், 'கடைசி விவசாயி' உள்ளிட்ட திரைப்படங்கள் கைவசம் உள்ளன. விஜய் சேதுபதியின் அடுத்த ரிலீஸ் மாமனிதன்தான் என்று யுவன்சங்கர் ராஜாவும் உறுதி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X