twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களிடம் பெருகும் ஆதரவு... “மாமனிதன்”படத்தை கொண்டாடும் குடும்பங்கள்

    |

    சென்னை : சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நேற்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "மாமனிதன்".

    இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறை கூட்டணி அமைத்து இசையமைத்திருக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா தனது YSR நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

    "மாமனிதன்" திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்ற நிலையில், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

     அப்பா அம்மா ரொமான்ஸ் தாங்கல.. எப்பவுமே கொஞ்சல்ஸ் தான்.. குஷ்பு மகள் சொன்ன பேமிலி சீக்ரெட்! அப்பா அம்மா ரொமான்ஸ் தாங்கல.. எப்பவுமே கொஞ்சல்ஸ் தான்.. குஷ்பு மகள் சொன்ன பேமிலி சீக்ரெட்!

    பெண்களின் கூட்டம்

    பெண்களின் கூட்டம்

    குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக அமைந்திருப்பதால் பெண்கள் குடும்பம் சகிதமாக வந்து இப்படத்தை பார்க்க துவங்கியுள்ளனர். நேற்று மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகளில் பெண்களின் கூட்டம் திரையரங்கில் அலைமோதியது என்பது வினியோகஸ்தர்கள் கூறிய அப்டேட் .அனைவருக்குமான படமாக "மாமனிதன்" வந்திருப்பதால், ஒருமுறையாவது இப்படத்தை காண வேண்டும் என்ற ஆவல் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

    திருமணம் ஆன வாலிபர்கள்

    திருமணம் ஆன வாலிபர்கள்

    சமீப காலமாக வந்த படங்களில், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படமாக "மாமனிதன்" இருப்பதால், பெண்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோதி வருகிறது. இப்படத்தை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஸ்டூடியோ 9 சார்பில் ஆர் கே சுரேஷ் வெளியிட்டுள்ளார். 35 வயதை கடந்த மனிதர்கள் பலரும் இந்த படத்தை மிகவும் நேசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .அதிலும் குறிப்பாக திருமணம் ஆன வாலிபர்கள் குழந்தை குட்டிக்காகவும், மனைவிக்காகவும், மிகப்பெரிய அர்ப்பணிப்புடன், கடின உழைப்புடன் செயல்படும் நிறைய ஆண்கள் இந்த படத்தின் காட்சிகளை வசனங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

    அன்றாட பிரச்சனைகளை...

    அன்றாட பிரச்சனைகளை...

    "அப்பன் தோத்த ஊர்ல புள்ள ஜெயிக்கிறது கஷ்டம்" என்கின்ற இந்த வசனம் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் மிகவும் அழுத்தமாக பிரதிபலிக்கிறது. சென்டிமென்ட் காட்சிகள் தவிர மிகவும் சாமானிய மக்களின் அன்றாட பிரச்சனைகளையும் பொருளாதார கஷ்டங்களையும் நடுநிலையுடன் இயக்குநர் சொல்லிய விதம் மிகவும் பாராட்டத்தக்கது. பி என் சி என்று சொல்லக்கூடிய கிராமப்புறங்களிலும் இந்த படம் நிறைய குடும்பங்கள் இடையே வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது என்பதை ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருகின்றனர்.

    எதார்த்தமான படைப்பு

    எதார்த்தமான படைப்பு

    தமிழ் திரைப்படங்களில் கமர்சியல் என்று சொல்லக்கூடிய பல விஷயங்களைத் தாண்டி மிகவும் ஏழ்மையான, எளிமையான, எதார்த்தமான,காட்சி படைப்புகளுக்கு ரசிகர்கள் எப்பொழுதும் பெருமை சேர்த்து விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் மாமனிதன் திரைப்படமும் வரும் நாட்களில் பல குடும்பங்கள் தியேட்டர் சென்று காண்பார்கள் என்று பெரிதும் நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Maamanithan Movie Supported by Woman Fans and Family Audience
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X