வெளியானது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தின் டீசர்... விரைவில் ரிலீஸ்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி -இயக்குனர் சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகி உள்ள படம் மாமனிதன்.

முன்னதாக இதே கூட்டணியில் வெளியான தர்மதுரை படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது.

இதையடுத்து எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள மாமனிதன் படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.

தர்மதுரை படம்

தர்மதுரை படம்

நடிகர் விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான படம் தர்மதுரை. இந்தப் படத்தை சீனு ராமசாமி இயக்கி இருந்தார். ரசிகர்களிடையே இந்த படம் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் தற்போது இணைந்துள்ளது.

மாமனிதன் படம்

மாமனிதன் படம்

விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி இணைந்து தற்போது மாமனிதன் என்ற படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த படத்திற்கு முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரது தந்தை இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

மாமனிதன் படம் கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தற்போது படக்குழு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டீசர் ரிலீஸ்

டீசர் ரிலீஸ்

இதையொட்டி படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இந்த டீஸரில் விஜய்சேதுபதி சிறப்பாக காணப்படுகிறார். தன்னுடைய மகளிடம் தன்னுடைய ஆட்டோ டிரைவர் கதையைக் கூறுவதாக இந்த டீசர் துவங்குகிறது. தொடர்ந்து தன்னுடைய மனைவி காயத்ரியிடம் என்னுடைய ஆட்டத்தை கவனி என்று அவர் கூறுவதாகவும் அமைந்துள்ளது.

சிறப்பான டீசர்

சிறப்பான டீசர்

ஆரம்பத்தில் குடும்ப சென்டிமென்ட் உடன் துவங்கும் இந்த டீசர் தொடர்ந்து அதிரடி ஆக்சன் தளத்திற்கு தடம் மாறுகிறது. முந்தைய படங்கள் போல் இல்லாமல் இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பான மற்றும் அழகான அப்பாவாக காணப்படுகிறார்.

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு

விஜய் சேதுபதி மற்றும் காயத்ரியுடன் இந்த படத்தில் லலிதா, குரு சோமசுந்தரம் மற்றும் அனைகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

ரசிகர்கள் குஷி

ரசிகர்கள் குஷி

நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவது ரசிகர்களை குஷி ஆக்கியுள்ளது. விஜய் சேதுபதியின் முந்தைய படங்களான லாபம், அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்கள் அவருக்கு கைகொடுக்காத நிலையில் இந்தப் படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X