மாமனிதன் படத்துக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்.. மகிழ்ச்சியில் இயக்குநர் சீனு ராமசாமி!

சென்னை : மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படத்திற்கு ரஷ்ய அரசால் மற்றுமொரு அங்கிகாரம் கிடைத்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சீனு ராமசாமி இயக்கத்தில் உருவானதுதான் மாமனிதன். இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

இதில், விஜய்சேதுதி, காயத்ரி, குருசோமசுந்தரம், சாஜி, லலிதா மற்றும் அனிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய்சேதுபதியின் மாமனிதன்

விஜய்சேதுபதியின் மாமனிதன்

ஆட்டோ ஓட்டுநரான விஜய்சேதுபதி தனது குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க நில தரகராக மாறுகிறார். ஒரு நாள் மக்களின் பணத்தை நில உரிமையாளர்கள் மோசடி செய்துவிடுகின்றனர். இதனால், சிக்கலில் மாட்டிக் கொள்ளும் விஜய்சேதுபதியின் குடும்பம் என்ன ஆனது.. பிரச்சனையில் இருந்து எப்படி தப்பித்தார் என்பதுதான் படத்தின் கதை.

உணர்வுபூர்வமான கதை

உணர்வுபூர்வமான கதை

கிராம் என்றாலே சாதிய பாகுபாடு, அரிவாள் வெட்டு, வன்முறை என பார்த்துப் பழகிப்போன ரசிகர்களுக்கு, சாதாரண நடுத்தர மக்களின் வாழ்க்கை கண்முன் கொண்டுவந்து காட்டி ஒரு உணர்வுபூர்வமான திரைப்படத்தை கொடுத்து மக்கள் மனதில் தனக்கு என்று தனியிடத்தை பிடித்துவிட்டார் சீனு ராமசாமி. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை மாமனிதன் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துவிட்டது.

சிறந்த திரைப்படம்

சிறந்த திரைப்படம்

இப்படம், இந்தோ பிரெஞ்ச் சர்வதேச திரைப்பட விழா மற்றும் டோக்கியோ திரைப்பட விழாக்களில் விருதுகளைப் வென்றது. மேலும், புனேவில் நடந்த, கிரேட் மெசேஜ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2022 விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழையும் பெற்றது. அதேபோல, ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த நடிகைக்கான விருது நடிகை காயத்ரிக்கு வழங்கப்பட்டது. இப்படி பல அங்கீகாரங்களைப் பெற்ற மாமனிதன் படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மற்றுமொரு அங்கிகாரம்

மற்றுமொரு அங்கிகாரம்

ஏப்ரல் 20 முதல் 27 வரை ரஷ்யாவில் நடைபெறும் 45வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் மாமனிதன் திரையிடப்படஉள்ளது. மதிப்புமிக்க திரைப்பட விழாக்குழு மாமனிதன் திரைப்பட தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் சீனு ராமசாமிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X