படத்துல தான் பன்னிக்குட்டி.. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே இப்படியா.. கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: மாமன்னன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனியாக ட்வீட் போட்டு நன்றி தெரிவித்திருந்தார்.

அந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், ஷூட்டிங் ஸ்பாட்டில் புல்லட் ஓட்டுவது, படத்தின் மேக்கிங் காட்சிகள் உள்ளிட்டவற்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Maamannan 50 Days: Keerthy Suresh latest video gets trolled

அதில், அவரது வளர்ப்பு நாய்க்குட்டியுடன் அவர் புல்லட் ஓட்டும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷை கலாய்த்து வருகின்றனர்.

50 நாட்களை கடந்த மாமன்னன்: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 29ம் தேதி வெளியான மாமன்னன் திரைப்படம் இன்றுடன் 50 நாட்களை கடந்து சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

Maamannan 50 Days: Keerthy Suresh latest video gets trolled

மாமன்னன் திரைப்படம் தியேட்டரில் வெளியானதை விட நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான போது தான் அதிகப்படியான மக்கள் அந்த படத்தை பார்த்து இந்தியளவில் நம்பர் ஒன் இடத்தில் அதனை டிரெண்ட் செய்தனர். வில்லனாக நடித்த பகத் ஃபாசிலை ரசிகர்கள் பலரும் கொண்டாட ஆரம்பித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Maamannan 50 Days: Keerthy Suresh latest video gets trolled

வெற்றி விழா: சென்னையில் இன்று மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில், கலந்து கொண்டு பேசிய கீர்த்தி சுரேஷ் இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். வடிவேலுவின் அந்த அழுகை சீனை பாராட்டிப் பேசினார்.

Maamannan 50 Days: Keerthy Suresh latest video gets trolled

முன்பெல்லாம் 100, 175, 250 நாட்கள் வெற்றி விழா கொண்டாடுவாங்க, இப்போ 50 நாளே பெரிய விஷயமாக மாறிவிட்டது என்றும் பேசியிருந்தார்.

நாய் குட்டியுடன் புல்லட்டில்: மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் புல்லட் ஓட்டிய வீடியோ காட்சிகளையும் மேக்கிங் காட்சிகளையும் ஷேர் செய்திருந்தார். அதில், தனது செல்ல நாய்க்குட்டியை புல்லட்டில் வைத்துக் கொண்டு ஓட்டிச் செல்லும் காட்சியையும் பதிவிட்டு நம்ம கொடி பறக்கும் 50வது நாள் மாமன்னன் என கேப்ஷன் போட்டிருந்தார்.

Maamannan 50 Days: Keerthy Suresh latest video gets trolled

படத்துல தான் பன்னிக்குட்டி: அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிலர், படத்துல தான் பன்னிக்குட்டியை கொஞ்சுறதெல்லாம். மாமன்னன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே நாய்க்குட்டியை தான் கீர்த்தி சுரேஷ் கொஞ்சுறாரு பாருங்க என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X