Thalaivar 170.. ரஜினியுடன் இணைந்த மாமன்னன் ரத்னவேலு.. சம்பவம் ரொம்ப பெருசா இருக்கும் போல!
சென்னை: தலைவர் 170 படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், மலையாள நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் ராஜா இயக்கத்தில், அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் தலைவர் 170.
இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கும் நிலையில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.

மஞ்சுவாரியர்: அந்த வகையில் லைகா நிறுவனம் நேற்று துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தியது. இதில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்க இருப்பதாக தெரிகிறது. மேலும், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது.
மிரட்டலான வில்லன்:அந்த வகையில், பாகுபலி படத்தில் பட்டையை கிளப்பிய ராணா டகுபதி தலைவர் 170 படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா காலையில் வெளியிட்டு இருந்த நிலையில், அடுத்ததாக ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பகத் பாசில்: அதில், மாமன்னன் படத்தில் ரத்னவேல் கதாபாத்திரத்தில் நடித்த பகத் பாசில் தலைவர் 170 படத்தில் கமிட்டாகி உள்ளார். இது குறித்து அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாமன்னன் படத்தில் உதயநிதி நடித்த அதிவீரன் கதாபாத்திரத்தை விட, பகத் பாசில் நடித்த ரத்னவேல் கதாபாத்திரம் அதீத தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொண்டாடிய ரசிகர்கள்: மாமன்னன் படம் பார்த்து பகத் பாசிலின் தீவிர ரசிகராக மாறிய ரசிகர்கள் ரத்னவேல் பாண்டியனை தங்களுக்கு ஏற்றவாறு பாடல்களை எடிட் செய்த மிக்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இணையத்தை துவம்சம் செய்தனர். தற்போது பகத் பாசில் ரஜினியின் தலைவர் 170 படத்தில் இணைவதால், அவரது ரசிகர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











