மாமன்னன் நடிகைக்கு விரைவில் டும் டும் டும்.. தீபாவளிக்கு முன் காதலரை அறிமுகப்படுத்திய ரவீனா ரவி!

சென்னை: பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரவீனா ரவி தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். மறைந்த நடிகர் முரளி நடிப்பில் வெளியான ஊட்டி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறு வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர் தான் ரவீனா ரவி.

2012ம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் டப்பிங் செய்து டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவீனா ரவி பல சூப்பர் ஹிட் படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

raveena ravi

அமைரா தஸ்தூர், காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மடோனா செபாஸ்டியன், மாளவிகா மோகனன், ராஷி கன்னா மற்றும் தீபிகா படுகோன் என பல முன்னணி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

raveena ravi love heroine

இயக்குநருடன் காதல்: 'வாலாட்டி' எனும் செல்லப்பிராணியான நாய் படத்தை இயக்கிய இயக்குநர் தேவன் ஜெயக்குமார் என்பவரைத்தான் டப்பிங் கலைஞரான ரவீனா ரவி காதலித்து வருகிறார். தீபாவளி ஸ்பெஷலாக சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் ரவீனா ரவி.

raveena ravi

ரசிகர்கள் வருத்தம்: ஏற்கனவே காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் அந்த படத்தின் நாயகன் உடன் மாலையும் கழுத்துமாக இவர் இருந்ததை பார்த்து இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் பதறினார்கள். ஆனால், அது படம் என தெரிந்ததும் நிம்மதியடைந்த இளைஞர்கள் தற்போது இந்த அறிவிப்பை பார்த்து எனக்கு வருத்தம்ப்பா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

raveena ravi

விரைவில் திருமணம்: தனது காதலரை மாமன்னன் படத்தில் ரத்னவேலுவுக்கு மனைவியாக நடித்த ரவீனா ரவி அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், கூடிய சீக்கிரமே இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டையும் தாண்டி ஒரு கிடாயின் கருணை மனு படத்தில் நடிக்க ஆரம்பித்த ரவீனா ரவி ராக்கி, வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன் மற்றும் வட்டார வழக்கு என பல படங்களில் நடித்துள்ளார்.

raveena ravi

குவியும் வாழ்த்துகள் அனேகன் படத்தில் அமைரா தஸ்தூருக்கும், ஜவான் படத்தில் தீபிகா படுகோனுக்கும் டப்பிங் பேசிய ரவீனா ரவி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் பகத் ஃபாசில் மனைவியாக நடித்து பலரையும் கவர்ந்தார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுக்கு ஒரு வசனம் கூட வைக்கலையே என விமர்சனங்கள் கிளம்பினாலும், பலரும் ரவீனா ரவிக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தனர். 30 வயதாகும் ரவீனா ரவி தனது காதலரை அறிமுகப்படுத்திய நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X