Maamannan: மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப்ஸ் போட்ட AR ரஹ்மான்... பட்டையை கிளப்பும் மாமன்னன் செகண்ட் சிங்கிள்

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்தப் படத்தில் உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மாமன்னன் படத்தில் இருந்து ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய ராசா கண்ணு பாடல் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.

 Maamannan: AR Rahman and Mari Selvaraj combo Maamannan Second Single released now

அதனைத் தொடர்ந்து மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடலை மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார்.

வெளியானது மாமன்னன் செகண்ட் சிங்கிள்

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ், தற்போது மாமன்னன் படத்தை இயக்கி முடித்துள்ளார். உதயநிதியின் கடைசிப் படமாக உருவாகியுள்ள மாமன்னன் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. உதயநிதியுடன் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முதன்முறையாக மாரி செல்வராஜ், உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், ஏஆர் ரஹ்மான் என புதிய கூட்டணியில் மாமன்னன் உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முக்கியமாக மாமன்னன் என்ற லீடிங் கேரக்டரில் வடிவேலு நடித்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது எனலாம். காமெடி கிங் வடிவேலுவை சீரியஸ்ஸான கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.

வடிவேலுவின் சீரியஸான நடிப்பு எப்படியிருக்கும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு கடந்த வாரம் வெளியான ராசா கண்ணு பாடல் விருந்தாக அமைந்தது. ஏஆர் ரஹ்மான் இசையில், யுகபாரதி வரிகளில் 'ராசா கண்ணு' என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடலை வடிவேலு பாடியிருந்தார். வடிவேலுவின் சன்னமான குரலில் மனதை உலுக்கிய ராசா கண்ணு பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 Maamannan: AR Rahman and Mari Selvaraj combo Maamannan Second Single released now

இதோ அதனைத் தொடர்ந்து தற்போது மாமன்னன் செகண்ட் சிங்கிளை இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலின் போஸ்டரில் ஏஆர் ரஹ்மானும் மாரி செல்வராஜும் செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்திருந்தனர். அதே ஸ்டைலுடன் Reggae என்ற ராப் இசைப் பின்னணியில் வெளியாகியுள்ளது மாமன்னன் செகண்ட் சிங்கிள். ஏஆர் ரஹ்மான் பாடியுள்ள இந்தப் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.

அதேபோல், மாமன்னன் செகண்ட் சிங்கிளில் ஏஆர் ரஹ்மானே டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப்ஸ், பிரபுதேவா ஸ்டைல் என குழந்தைகளுடன் ஏஆர் ரஹ்மானின் ஆட்டத்துடன் இந்தப் பாடல் தரமாக வெளியாகியுள்ளது. தனது இசை நிகழ்ச்சிகளில் கூட ஏஆர் ரஹ்மான் இப்படி ஆட்டம் போட்டது கிடையாது என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

 Maamannan: AR Rahman and Mari Selvaraj combo Maamannan Second Single released now

மேலும், "ஏ நண்பா ஏலே நண்பா நீ தெம்பா ஏறு நண்பா ஜிகு ஜிகு ரயில்" எனத் தொடங்கும் இப்பாடலின் வரிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. முக்கியமாக இந்தப் பாடலில் வரும் "எல்லாம் மாறும் எல்லாம் மாறும் உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்" என்ற வரிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாடலின் இறுதியில் ஏஆர் ரஹ்மானுடன் மாரி செல்வராஜ், சாண்டி மாஸ்டரும் ராப் வாக் நடந்து மாஸ் காட்டியுள்ளனர். ராசா கண்ணு பாடலைத் தொடர்ந்து மாம்மன்ன செகண்ட் சிங்கிளும் இப்போது பட்டையை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

பாடலின் இறுதியில் மாமன்னன் படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்தும் அப்டேட் கொடுத்துள்ளனர். அதன்படி, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவும், ட்ரெய்லர் ரிலீஸும் ஜூன் 1ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X