Maamannan: வடிவேலு ரசிகர்களுக்கு மஜா தான்... பிரபல சேனலில் மாமன்னன் இசை வெளியீட்டு விழா
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் இம்மாதம் இறுதியில் வெளியாகிறது.
உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், மாமன்னன் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
சன் டிவியில் மாமன்னன் இசை வெளியீட்டு விழா:மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மாமன்னன் படம் இம்மாதம் இறுதியில் வெளியாகவுள்ளது. உதயநிதியின் கடைசிப் படமாகவும் வடிவேலுவுக்கு கம்பேக் கொடுக்கும் படைப்பாகவும் உருவாகியுள்ளது மாமன்னன். இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் ஆகியோர் லீடிங் கேரக்டரில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 1ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், ஏஆர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல், சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், பாண்டிராஜ், ஏஆர் முருகதாஸ், பா ரஞ்சித், ஹெச் வினோத், விக்னேஷ் சிவன், எஸ்ஜே சூர்யா, சிவகார்த்திகேயன், கவின், விஜய் ஆண்டனி, சூரி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியோடு தொடங்கிய இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. வரும் 18ம் தேதியான ஞாயிற்றுக் கிழமை நண்பகல் 12 மணிக்கு டெலிகாஸ்ட் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்நிகழ்ச்சியை காண ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். வடிவேலுவின் காமெடியான பேச்சைக் கேட்க காத்திருக்கின்றனர்.
அவர் மட்டும் இல்லமல் கமல், உதயநிதி, மாரி செல்வராஜ், ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் பேச்சைக் கேட்கவும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், வெற்றிமாறன், பா ரஞ்சித், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, எஸ்ஜே சூர்யா ஆகியோரும் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யங்களை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாமன்னன் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இதில் ராசா கண்ணு என்ற பாடலை வடிவேலு பாடியுள்ளார்.
இதே பாடலை மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு மேடையில் பாடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இதனால், மாமன்னன் இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் பார்க்க ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளனர். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவை ஆர்ஜே விஜய், டிடி இருவரும் தொகுத்து வழங்கினர்.


Click it and Unblock the Notifications











