Maamannan: மாமன்னன் படம் தான் சீரியஸ்... ஆனா ஷூட்டிங்ல என்னாமா லூட்டி அடிச்சிருக்காங்கன்னு பாருங்க!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது.
உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மாமன்னன் படம் சீரியஸ்ஸாக இருந்தாலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர் பயங்கரமாக லூட்டி அடித்துள்ளனர்.
இந்நிலையில், மாமன்னன் வெற்றியை கொண்டாடும் விதமாக பல சுவாரஸ்யங்கள் நிறைந்த செலப்ரேஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாமன்னன் மேக்கிங் வீடியோ: மாரி செல்வராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதுதான் உதயநிதியின் கடைசிப் படம் என சொல்லப்பட்டாலும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தாலும் வருவேன் என அவரே கூறியிருந்தார். மாமன்னன் படத்தில் உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில், லால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் வடிவேலுவின் கேரக்டரும் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்துள்ளது. இதுவரை காமெடியில் மட்டுமே கலக்கி வந்த வடிவேலு, முதன்முறையாக இப்படத்தில் மாமன்னன் என்ற சீரியஸான கேரக்டரில் நடித்திருந்தார். சமூக நீதியை பின்னணியாக வைத்து தனது வழக்கமான அடையாள அரசியல் கதைகளத்தில் மாமன்னன் படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். இதனால், இந்தப் படம் அதிக எதிர்பார்ப்புடன் வெளியானது.
உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், ஏஆர் ரஹ்மான், தேனி ஈஸ்வர் என பிரம்மாண்டக் கூட்டணியில் வெளியான மாமன்னன், பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதனிடையே மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் கார், மாமன்னன் படக்குழுவினருக்கு ஏராளமான பரிசுகளை கொடுத்து அசரடித்தார் உதயநிதி. இதன் தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களை அழைத்து மாமன்னன் சக்சஸ் மீட்டிங்கும் நடத்தி முடித்தார்.
இந்நிலையில், மாமன்னன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக செலப்ரேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. மாமன்னன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோதான் இது என்பது குறிப்பிடத்தக்கது. படம் முழுவதும் காமெடி இல்லாமல் சீரியஸ்ஸாக இருந்தது என்றால், மேக்கிங் வீடியோவில் மொத்த டீமும் செம்ம லூட்டி அடித்துள்ளதை பார்க்க முடிகிறது.

மாரி செல்வராஜ் காட்சிகளை விவரிக்கும் போது உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஜாலியாக அவரை கலாய்க்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், உதயநிதி, ஃபஹத் பாசில் முன் வடிவேலு தான் நடித்த காமெடி காட்சிகளை ஆக்டிங் செய்து காட்டுவதும் உள்ளது. இவர்களுடன் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் உள்ளிட்ட படக்குழுவினரும் செம்ம ஜாலி செய்துள்ளனர்.
அதேபோல், ஜிகு ஜிகு ரயில் பாடல் ஷூட்டிங்கில் ஏஆர் ரஹ்மானை சாண்டி மாஸ்டர் ஆட வைத்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் படப்பிடிப்பின் நடுவே உதயநிதி, கீர்த்தி சுரேஷ் இருவரும் பேட்மிண்டன் விளையாடுவதும், உதயநிதி, மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கிரிக்கெட் ஆடும் காட்சிகளும் உள்ளன. முக்கியமாக படத்தில் சீரியஸ்ஸான கேரக்டரில் நடித்த வடிவேலுவும் ஃபஹத் பாசிலும் செம்ம ஃபன் செய்துள்ளனர். இந்த மாமன்னன் மேக்கிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











