Maamannan: தேவா குரலில் நெஞ்சமே நெஞ்சமே... இசைபுயலுடன் இணைந்த தேனிசைத் தென்றல்... கிறங்கிய ரசிகர்கள்
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது.
உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இப்படத்தில் இடம்பெற்ற நெஞ்சமே நெஞ்சமே பாடல் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் பாடல் தற்போது தேனிசைத் தென்றல் குரலில் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
தேவா குரலில் நெஞ்சமே நெஞ்சமே:கடந்த மாதம் 29ம் தேதி வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபஹத் பாசில் நடித்திருந்த இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
மாமன்னன் வெளியான முதல் வாரம் முதலே இப்படத்தின் வெற்றியை கொண்டாடத் தொடங்கிவிட்டார் உதயநிதி. இதனை ஏஆர் ரஹ்மான் தான் கேக் வெட்டி தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாமன்னன் தான் கடைசிப் படம் என ஏஆர் ரஹ்மானிடம் கால்ஷீட் வாங்கியதாக உதயநிதியே கூறியிருந்தார். அதேபோல், முதலில் ஒரு பாடல் மட்டும் போதும் எனக் கூறிய மாரி செல்வராஜ்ஜுக்கு, மொத்தமாக 7 பாடல்களைப் போட்டுக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார் ஏஆர் ரஹ்மான்.
மாமன்னன் படத்தில் இடம்பெற்ற ராசா கண்ணு பாடலை வடிவேலு பாடியிருந்தார். ஏஆர் ரஹ்மான் இசையில் வடிவேலு பாடிய முதல் பாடலே செம்ம ஹிட்டடித்தது. அதேபோல், விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் பாடிய 'நெஞ்சமே நெஞ்சமே' பாடலும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இணைந்தது. மனதை வருடும் மெலடியாக உருவான இப்பாடலை இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்ட பலரும் வெகுவாகப் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் நெஞ்சமே நெஞ்சமே பாடலின் இன்னொரு வெர்ஷன் வெளியாகியுள்ளது. அதனை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். முதல்முறையாக ஏஆர் ரஹ்மான் இசையில் தேவா பாடியுள்ளது ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. மாமன்னன் படத்தில் வரும் சிறுவயது உதயநிதியின் பிளாஷ்பேக் காட்சியில் தேவாவின் நெஞ்சமே நெஞ்சமே வெர்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெஞ்சமே நெஞ்சமே பாடலின் தேவா வெஷன் 1.30 நிமிடங்கள் மட்டுமே உள்ளது. ஆனாலும் ஆத்மார்த்தமாக அவர் பாடியதை கேட்ட ரசிகர்கள், இதன் முழு பாடல் வேண்டும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தேவாவின் குரலில் நெஞ்சமே நெஞ்சமே பாடலை கேட்கும் போது மனதிற்கு ஆறுதலாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல், இசைப் புயல், தேனிசைத் தென்றல், வைகைப் புயல் இவர்கள் மூவருமே மாமன்னன் தான் என ரசிகர்கள் சிலிர்ப்புடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











