குடிகாரன் என் மேல சாஞ்சான்.. பளார்னு அடிச்சுட்டேன்.. மோசமான அனுபவத்தை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

maamannan heroine Keerthy suresh Shared her terrible experience

2000ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பைலட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், ஒரு சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்: கீதாஞ்சலி மலையாளப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம், ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான நடிகையர் திலகம் படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் சாவித்ரியாக வாழ்ந்து அனைவரையும் வியப்பில் வாழ்த்தினார்.

மாமன்னன்: இவர் நடிப்பில் அண்மையில் மாமன்னன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஜீன்ஸ் மற்றும் ஷர்ட் போட்டுக்கொண்டு புரட்சி பெண்ணாக நடித்திருந்தார். தியேட்டரில் வெளியான மாமன்னன் திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. தற்போது இவர் ஜெயம் ரவியின் சைரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கண்ணி வெடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

குடிகாரன் என் மேல சாஞ்சான்: யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நானும் என் தோழியும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது, குடிகாரன் என் மேல சாஞ்சான் நான் அவனை அந்த இடத்திலேயே பளார் என்று அடித்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தோம். அப்போது திடீரென என் தலையில் வண்டி மோதி எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்தேன், ஒரு நிமிஷம் எதுவுமே புரியவில்லை.

பளார்னு அடிச்சுட்டேன்: திரும்பி பார்த்தால், அந்த குடிகாரன் என் தலையிலேயே பயங்கரமா அடிச்சிட்டு ஓடிட்டான். அப்பவும் நான் விடல, அவன் பின்னாடியே ஓடிப்போய் துரத்தி பிடித்து அவனை போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நாள் உட்கார வைத்தேன், இந்த விஷயத்தை என்னால என்னைக்குமே மறக்க முடியாது என்று நடிகை கீரத்தி சுரேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X