Keerthy Suresh: நண்பர்களுடன் ஜாலி டூர் போன கீர்த்தி சுரேஷ்.. பீச் ஓரத்தில் அப்படி ஒரு போஸ்!
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் விடுமுறையை ஜாலியாக நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

கதாநாயகர்களுடன் காதல் டூயட் பாடுவது, கதாநாயகியை முதன்மைப்படுத்தும் கதையை தேர்வு செய்து நடிப்பது என சகல வேடங்களிலும் கலக்கி வருகிறார்.
மாமன்னன்: நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படம் அண்மையில் திரையரங்கில் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஃபகத் பாசில், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வழக்கமாக மாரி செல்வராஜின் படங்களில் சமத்துவமும், காத்திரமான அரசியலும் இருக்கும் அதே போல இந்தப் படத்திலும் பல விஷயங்களை பேசி உள்ளார்.

லீலா கதாபாத்திரம்: விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற மாமன்னன் படம் இதுவரை ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் புரட்சிகரமான கருத்து பேசும் பெண்ணாக லீலா என்கிற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இதுதான் பெரிய சவால்: அண்மையில் தனது சினிமா அனுபவத்தை பகிர்ந்து இருந்த கீர்த்தி சுரேஷ், அழகாக இருப்பது பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால் எதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிப்பது மிகவும் கஷ்டம். அதற்கு ஏற்ற மாதிரி காட்சியளிப்பதற்காக மணிக்கணக்காக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டி வரும். இதுதான் பெரிய சவால் என்று கூறியிருந்தார்.

நண்பர்களுடன் ஜாலி டூர்: தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தனது நண்பர்களுடன் விடுமுறையை ஜாலியாக தாய்லாந்தில் கொண்டாடி வருகிறார். தாய்லாந்தில் உள்ள Ko Samui எனும் இடத்தில் கீர்த்தி சுரேஷ் சுற்றி திரியும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











