Maamannan: நெட்பிளிக்ஸில் ட்ரெண்டிங் நம்பர் 1... ஓடிடி ரசிகர்கள் கொண்டாடும் மாமன்னன்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த மாதம் 29ம் தேதி வெளியானது.
உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மாமன்னன் படத்திற்கு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல ஓபனிங் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது நெட்பிளிக்ஸ் தளத்திலும் இப்படத்தை ஓடிடி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நெட்பிளிக்ஸ் ட்ரெண்டிங்கில் மாமன்னன்: மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்ததும், ஏஆர் ரஹ்மானின் இசையும் இப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியான மாமன்னன் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. மாரி செல்வராஜ், உதயநிதி இருவருக்கும் மாமன்னன் படத்தின் வசூல் புதிய நம்பிக்கையை கொடுத்தது. இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் கார் பரிசாக கொடுத்தார் உதயநிதி. அதேபோல், மாமன்னன் படத்தில் நடித்த பலருக்கும் உதயநிதி சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தினார்.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாமன்னன் படத்தின் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி இந்த வாரம் முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது மாமன்னன். ஓடிடி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம், முதல் வாரமே நெட்பிளிக்ஸ் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.
இதனை தனது டிவிட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து 3 தினங்களாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் மாமன்னன், அடுத்தடுத்த நாட்களிலும் அதிகமான பார்வைகளை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல ஓபனிங் கிடைத்த படமாக மாமன்னன் காணப்படுகிறது. அதேபோல், ஓடிடி ரசிகர்களும் இப்படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்களே கொடுத்துள்ளனர்.
வடிவேலு - ஃபஹத் பாசில் இருவரது நடிப்பும் மாமன்னன் படத்திற்கு பெரிய பலம் என ஓடிடி ரசிகர்களும் கூறி வருகின்றனர். மாமன்னன் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால், மாரி செல்வராஜ்ஜின் அடுத்த படைப்புகளுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











